Mansoor Ali Khan - மன்சூர் அலிகானுக்கு எதிராக விஜய்யின் திரை மறைவு வேலை இதுதான்.. பிஸ்மி ஓபன் டாக்

சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் விஜய் திரை மறைவு வேலை செய்திருக்கிறார் என பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தான் கடந்த சில நாட்களாகவே கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், 'லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட் ரூம் காட்சி இருக்கும் என நினைத்தேன். பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால் இல்லை' என ஆபாசமாக பேசியிருந்தார்.

Bismi has said that actor Vijay has done behind-the-scenes work against Mansoor Ali Khan

எதிர்ப்பு: அவரது இந்தப் பேச்சுக்கு த்ரிஷா உள்ளிட்ட பலரும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்துவருகின்றனர். மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு என்று கூறியிருந்தார் த்ரிஷா. அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகானுடன் ஒன்றாக பணியாற்றினோம். அவரது இந்தப் பேச்சு ரொம்பவே மோசமாக இருக்கிறது. அவர் கூறிய கருத்துக்களை கேட்டு கோபம்தான் ஏற்படுகிறது.

பட தரப்பிலிருந்து எதிர்ப்பு: பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மரியாதை தரப்பட வேண்டும். மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். அதேபோல் லியோ படத்தை தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

விஜய்யின் மௌனம்: ஆனால் லியோ படத்தின் ஹீரோ விஜய்யோ இந்த விஷயம் குறித்து இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்துவருகிறார். அவரது இந்த மௌனத்துக்கும் பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். தெலுங்கு மொழி ஹீரோ சிரஞ்சீவி கண்டனம் தெரிவிக்கையில் இங்கிருக்கும் விஜய் உள்ளிட்ட ஹீரோக்கள் ஏன் வாயே திறக்கவில்லை என ஓபனாகவே பலரும் கேள்வியை முன் வைக்கின்றனர்.

திரை மறைவு வேலை: இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜய்யின் செயல் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "த்ரிஷா விவகாரத்தில் விஜய் எதுவுமே பேசவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். ஆனால் மன்சூர் அலிகானுக்கு எதிராக லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட்; படத்தின் தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட் ஆகியவைகளுக்கு பின்னால் விஜய் இருக்கிறார் என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரிகிறது.

இவர்கள் எல்லாம் விஜய்யை சந்தோஷப்படுத்துவதற்காகவே இந்த ட்வீட்களை போட்டிருக்கிறார்கள். ஏன் விஜய்யை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது திரைத்துறையில் இருப்பவர்களுக்கு தெரியும். இருந்தாலும் விஜய் படத்தின் ஹீரோயின் பற்றியும்; அந்தப் படத்தை மையமாக வைத்துதான் மன்சூர் அலிகான் இந்த மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அதனால் முதலில் எதிர்க்க வேண்டியது விஜய்தான். ஆனால் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். அவரது துறை சார்ந்த பெண் சந்திக்கும் பிரச்னைக்கே குரல் கொடுக்காத விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டுக்காக எப்படி குரல் கொடுப்பார் என மக்கள் கேட்பார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X