வெங்கட் பிரபுவுக்கு அதுதான் பிடிக்குமாம்.. பிறகுதான் சினிமாவாம்.. எல்லை மீறிய பிரபலம்
சென்னை: வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த வருடம் அவரது இயக்கத்தில் விஜய் நடித்திருந்த GOAT திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு தான் இயக்கிய படங்கள் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்தவர். முதல் படத்திலேயே பெரும்பாலான புதுமுகங்களை கொண்டு சூப்பர் ட்ரீட்மென்ட்டை தனது சினிமா மூலம் கொடுத்தார். அதனால் முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அடுத்தடுத்து இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்களுமே அனைவருக்குமான ஃபேவரைட் லிஸ்ட்டில்தான் இருக்கிறது.
அஜித்துடன் கூட்டணி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். அந்தப் படம் அஜித்தின் 50ஆவது படம். வெங்கட் பிரபுவுடன் ஏகே இணைகிறார் என்று அப்போது அறிவிப்பு வந்த சமயத்தில்; இக்கூட்டணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் தரமான படமாக அதை கொடுத்து மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்தார். இதனால் வெங்கட்டின் கரியர் அந்தப் படத்திலிருந்து உச்சம் சென்றது.

விஜய்யுடன் கூட்டணி: மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகாவிட்டாலும்; மங்காத்தா கொடுத்த தாக்கம் குறையவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கினார். அஜித்துக்கு போலவே விஜய்க்கும் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் சொல்லிக்கொள்ளும்படி விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் வசூலில் சக்கைப்போடு போட்டது.
அடுத்த படம்: இதற்கிடையே சிவகார்த்திகேயனை வைத்து அவர் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் கோட் வாய்ப்பு வந்ததால் அந்தப் படத்துக்கு சென்றுவிட்டார். இப்போது எஸ்கேவை வைத்து அவர் இயக்கவிருக்கும் படத்தின் பணிகளை வெங்கட் ஆரம்பித்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றதால்; இப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறாராம் அவர்.
பார்ட்டி செய்யும் வெங்கட்: வெங்கட் பிரபுவை பொறுத்தவரை ரொம்பவே ஜாலியான மனிதர். அதன் வெளிப்பாடுதான் அவரது சினிமாக்களிலும் தென்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி நிறைய பார்ட்டி செய்யும் செலிபிரிட்டிகளில் அவரும் ஒருவர். அடிக்கடி பார்ட்டி செய்வதை அவரே பல மேடைகளில் ஓபனாக கூறியிருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
பிஸ்மி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வெங்கட் பிரபு என்று ஒரு இயக்குநர் இருக்கிறார் இல்லையா?.. அவருக்கு முதலில் குடிப்பதுதான் வேலை. ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில்தான் சினிமா எடுப்பார். இதனை நான் சொல்லவில்லை. இதை பார்த்தால் அவரே சந்தோஷப்படுவார். பார்ட்டி செய்தேன், பார்ட்டி செய்வேன் என்று குடித்து மட்டை ஆவதற்கு அலங்காரமான வார்த்தையை பயன்படுத்துவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











