கல்யாணத்துக்கு பிறகு தனுஷ் அப்பா அம்மாவ மறந்துட்டாரு.. பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி!

சென்னை : கல்யாணத்திற்கு பிறகு தனுஷ் அப்பா அம்மாவை மறந்துவிட்டார் என்று பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், போயஸ் கார்டனில் 150 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான வீடுகட்டி உள்ளார்.

இந்த வீட்டின் கிரஹபிரவேசத்தில் தனுஷின் அம்மா, அப்பா மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதில், தனுஷின் மகன்கள் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், கடந்த 2021ம் ஆண்டு போயஸ் கார்டனில் பூமி பூஜை போட்டு வீடுகட்டத் தொடங்கினார். இந்த பூஜையில் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த், லதா ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போது வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் கிரஹபிரவேசமும் நடந்துள்ளது. இந்த வீட்டை தனது தாய், தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் தனுஷ்.

அப்பா அம்மாவ மறந்துட்டாரு

அப்பா அம்மாவ மறந்துட்டாரு

இந்நிலையில், நமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள பத்திரிக்கையாளர் பிஸ்மி, தனுஷ் சினிமாவிற்கு வந்த புதிதில், அம்மா, அப்பாவை மதிக்கும் ஒரு மகனாகத்தான் இருந்தார். அதே நேரம் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, தனுஷ் முற்றிலுமாக பெற்றோரிடம் இருந்து விலகியே இருந்தார். இந்த தகவலை தனுஷின் அம்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தனுசை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு, அவன் ஒரு வார்த்தை பேச மாட்டானா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார். ஆக தனுஷ், அந்த அளவுக்கு அப்பா அம்மாவிடம் இருந்து விலகி இருந்தார்.

பெற்றோரை அழைத்திருக்க மாட்டார்

பெற்றோரை அழைத்திருக்க மாட்டார்

தனுஷ் போயஸ் கார்டனில் வீடுகட்ட தொடங்கிய போது மனைவியோடு இணைந்து இருந்தார். ஆனால், முடிக்கும் போது மனைவியுடன் இல்லை. ஒருவேளை தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து இருந்து இருந்தால், தனுஷ் நிச்சயம் தனது அம்மா அப்பாவை கிரஹபிரவேசத்திற்கு அழைத்து இருக்கமாட்டார். ஐஸ்வர்யா இல்லாததால், பெற்றோரை அழைத்து இருக்கிறார்.

மகன்களிடம் அனுமதி

மகன்களிடம் அனுமதி

அதே போல,இந்த முக்கியமான விழாவில் தனுஷின் மகன்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனுஷ், தனது மகன்களோடுதான் அதிக நேரம் செலவு செய்கிறார் என்பதால், கிரஹபிரவேசம் குறித்து நிச்சயம் தனது மகன்களிடம் கூறி அனுமதி வாங்கி இருப்பார் என பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X