Ajithkumar: அஜித்குமார் உடல் எடையைக் குறைத்தது இப்படிதானாம்.. பிஸ்மி சொல்றத கேட்டாலே பயமா இருக்கே?
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்களின் வரிசையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களின் தனது வேலைகள் அனைத்தையும் அஜித் முடித்துக் கொடுத்துவிட்டு, தான் ஏற்கனவே திட்டமிட்ட கார் ரேஸ் பந்தயத்தில் தனது அணியுடன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அஜித்குமார் தனது உடல் எடையை குறைந்த நாட்களில் அதிகப்படியான எடையைக் குறைத்துள்ளார். அவர் எப்படி இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்தார் என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்தது. இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி இது தொடர்பாக கூறியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் வழக்கமாகவே தனது உடல் எடையை அதிகரித்துக் கொள்வதும், உடல் எடையைக் குறைத்துக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான். படத்திற்கு தேவைப்பட்டால், உடனே உடல் எடையைக் குறைக்க என்ன வழியோ அதனைப் பின்பற்றுவார். அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதால், தனது உடல் எடையை கூடுமானவரைக் குறைத்துள்ளார். உடல் எடையைக் குறைத்த பின்னர் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் அழ்த்தியது.

குறிப்பாக காதல் மன்னன் படத்தில் எப்படி ஒல்லியாக இருந்தாரோ அந்த அளவுக்கு ஒல்லியாக இருந்தார். இது தொடர்பாக முதலில் குட் பேட் அக்லி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட, அதன் பின்னர், விடாமுயற்சி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டனர். புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது.

பிஸ்மி: ஆனால், பலரும் அஜித்குமார் மட்டும் எப்படி நினைத்தால் உடல் எடையை அதிகரித்துக் கொள்கின்றார். நினைத்தால் உடல் எடையைக் குறைத்துக் கொள்கின்றார் என்ற கேள்வியை இணையத்தில் எழுப்பி வந்தனர். இது தொடர்பாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்தாலும், பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏன் பயத்தையே கூட உருவாக்கியுள்ளது எனலாம்.

வெந்நீர்: அதாவது கார் ரேஸில் கலந்து கொள்ள தனது உடல் எடையைக் குறைக்க முடிவு செய்த அஜித், தொடர்ந்து 3 மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல், வெறும் வெந்நீர் மட்டும் குடித்து வந்துள்ளார். அவ்வப்போது உடலுக்கு சக்தி தேவைப்படும் என்பதற்காக புரோட்டீன் பவுடர்களும், வைட்டமின் மாத்திரிகளையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதனால்தான் குறைந்த காலகட்டத்தில் இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைக்க முடிந்துள்ளது" என வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

போட்டி: மேலும் இந்த மூன்று மாத கால இடைவெளியில் மருத்துவரின் ஆலோசனையும் அஜித் பின்பற்றி இருப்பார் எனவும் பலர் கூறிவருகின்றனர். அஜித் கலந்து கொள்ளவுள்ள கார் பந்தயமானது துபாயில் நடைபெறவுள்ளது. மொத்தம் 24 மணி நேரம் நடைபெறும் இந்த போட்டியில், அதிக தூரத்தைக் கடக்கும் அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்.



Click it and Unblock the Notifications











