Kushboo: குஷ்புவுக்கே தைரியம் இல்லையா? பாலியல் தொல்லை கொடுத்தது யார்? கேள்விகளை அடுக்கும் பிஸ்மி!
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகை குஷ்பூ எதிர்கொண்ட பாலியல் தொல்லை தொடர்பான விஷயம் குறித்து தான். குஷ்பூ இது தொடர்பாக பேசுகையில் தன்னை ஒரு நடிகர் பாலியல் ரீதியாக அணுக முயற்சித்ததாகவும் இப்போது எனது செருப்பு சைஸ் 41 எனக் கூறி மிரட்டி விட்டதாகவும் கூறினார். இவரது இந்த பேச்சு திரைத்துறையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இது தொடர்பாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக பிஸ்மி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி உள்ளதாவது,” சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பாலியல் தொல்லை என்பது இருந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் என்றால் பெண்கள் தான். அதாவது நடிகைகள் தான். தொடக்கத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளியே செல்ல அச்சப்பட்டனர். ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் கூட மலையாள சினிமாவில் பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டியில் தைரியமாக கூறினர். பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ளும் நடிகர்கள் குறித்து பேசும் போது தான் இந்த நபரால் தான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று வெளிப்படையாக பேசுவது தான் சரியாக இருக்கும். அப்படி இருக்கும் போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரைச் சொல்லாமல் பத்திரிகைகளில் கிசு கிசு செய்து எழுதுவது போல் கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது. சம்பந்தப்பட்ட நபரை நேரடியாக அடையாளம் காட்டாமல் போகும்போது, யூக பட்டியலில் அதற்கு சம்பந்தமே இல்லாத பிரபலங்களின் பெயர்களும் சேர்ந்து விடுகிறது.
விஜய்: அப்படி நடிகை குஷ்பூ தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து பேசுகையில் தான் யாரால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்பது கருத்து கூறவில்லை. இதனால் பலரும் பல விதமாக பேசி வருகின்றனர். குறிப்பாக குஷ்புவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நடிகர் விஜய் தான் என்றும் கூறி வருகின்றனர். இவ்வாறு செய்திகளை இணையத்தில் பரப்புபவர்கள் வாரிசு படப்பிடிப்பின் போது விஜயும் குஷ்புவும் எடுத்துக் கொண்ட செல்பி ஆதாரமாக காட்டிக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில் வாரிசு படத்தில் குஷ்பூ நடிப்பதாக இருந்தது. அதன் பின்னர் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேறினார். அப்போது எடுக்கப்பட்ட செல்பி இணையவாசிகள் தற்போது தவறாக பரப்பி வருகின்றனர். குஷ்புவுக்கு விஜய் சகோதரர் போன்றவர்.
சிம்பு: அதேபோல் சிம்பு தான் குஷ்புக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும் கூறி வருகின்றனர். சிம்பு குஷ்புவின் மகன் வயது உடையவர். இது தொடர்பாக குஷ்பூ பேசுகையில் தான் இந்த நடிகரால் தான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என வெளிப்படையாக கூறியிருந்தால் சம்மந்தமே இல்லாத விஜய் மற்றும் சிம்புவின் பெயர் இதில் அடிபடாமல் இருந்திருக்கும்.
கைகாட்டி: மூத்த நடிகையான குஷ்பூ தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய நபரை இவர்தான் எனக் கைகாட்டியிருக்க வேண்டும். இதுமட்டும் இல்லாமல், சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்ற நடிகையாக உள்ள குஷ்பு இதன் பின்னரும் ஏன் இப்படி நடந்து கொள்ளவேண்டும். அரசியல் கட்சிகளில் இருந்துள்ளார். தேசிய மகளிர் ஆணையப் பொறுப்புகளில் இருந்துள்ள குஷ்புவே குற்றவாளியின் பெயரைச் சொல்லாமல் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. பேட்டி ஒன்றில் தனது தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனக் கூறிய குஷ்புக்கு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை அடையாளம் காட்டுவதில் என்ன சிக்கல்? குஷ்புவுக்கே தைரியம் இல்லையா? ” எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் பலர் பிஸ்மி கூறுவதைச் சரி எனவும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











