பல கோடிக்கு கல்யாண கேசட்டு விற்க இப்படியொரு பஞ்சாயத்தா?.. தனுஷை நயன்தாரா அசிங்கப்படுத்தலாமா?
சென்னை: நடிகை நயன்தாரா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தனது கல்யாண கேசட்டை விற்கத்தான் இப்படி கடந்த 2 ஆண்டுகளாக தவியாக தவித்து வந்திருக்கிறார் என்றும் தனுஷ் மீது இத்தனை வன்மங்களை நயன்தாரா கொட்டியுள்ள நிலையில், அவர் தனுஷுக்கு செய்த துரோகம் பற்றி தெரியுமா என பத்திரிகையாளர் பிஸ்மி பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வரும் நவம்பர் 18ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. பல கோடிக்கு அந்த டீலை நடிகை நயன்தாரா தனது திருமணம் முடிந்த கையோடு முடித்திருந்தார். ஆனால், 2 ஆண்டுகளாக தனுஷ் தரப்பிடம் இருந்து NOC கிடைக்காத நிலையில், நானும் ரவுடி தான் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளையும் அந்த படத்தின் பாடல்களையும் பயன்படுத்த தனுஷ் அனுமதி தராதது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அதற்கு அனுமதி தரவேண்டும் என்றால் 10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தனுஷ் கேட்டுவிட்டார் என்பதால் நீதித்துறையில் வழக்குப் போட்டு பார்த்தாலும் அதில் சாதிக்க முடியாது என்று தெரிந்துக் கொண்டு தனுஷ் மீது தேவையில்லாத பழியை போட்டு இருக்கிறார் நயன்தாரா எனக்கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவன் எழுதியது: இந்த கடிதம் முழுக்க முழுக்க விக்னேஷ் சிவன் எழுதியது என்றும் நயன்தாரா சம்மதத்துடன் இது நடந்திருக்கும் என பிஸ்மி கூறியுள்ளார். தனுஷை டார்கெட் செய்து நயன்தாரா இப்படி வன்மத்தை கக்க ஒரு பெரிய பின்னணி பிரச்சனையே உள்ளது என்றும் அவர் தனது யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார்.
நயன்தாரா செய்த துரோகம்: தனுஷ் நானும் ரவுடி தான் படத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க நினைத்தபோது தனது காதலர் விக்னேஷ் சிவனை ஹைலைட் செய்ய வேண்டும் என்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக்க வேண்டும் என்றும் சுமார் 10 கோடி வரை பட்ஜெட்டை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இழுத்து விட்டுள்ளனர். அந்த 10 கோடியைத்தான் தனுஷ் தற்போது அவர்களிடம் கேட்டிருக்கிறார். வெறும் 3 செகண்ட் வீடியோவுக்கு அவர் கேட்கவில்லை என்றும் பிஸ்மி பழைய கதையை கூறியுள்ளார்.
பல பஞ்சாயத்து: திடீரென இந்த விஷயம் வெடிக்கவில்லை. கடந்த 2 வருடங்களாக ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் நடைபெற்றுள்ளன. வுண்டர்பார் நிறுவனத்தில் பணியாற்றும் நபரிடம் போன் செய்து விக்னேஷ் சிவன் தனக்கு என்ஓசி கொடுக்க சொல்லியிருக்கிறார். அவர் முறையாக தனுஷிடம் அனுமதி வாங்கவில்லை. அதன் பின்னர், தனுஷிடம் இந்த விவரம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அதை பார்த்து கடுப்பாகி தான் தனுஷ் தரமுடியாது என சொல்லிவிட்டார் இப்படித்தான் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் ஆரம்பித்ததாக பிஸ்மி கூறியுள்ளார்.
தனுஷ் நடவடிக்கை எடுப்பார்: நயன்தாரா தனது கல்யாண கேசட்டை பல கோடிக்கு விற்பனை செய்துள்ள நிலையில், அந்த நிறுவனம் நானும் ரவுடி தான் பாட்டைசேர்க்க சொல்லிய நிலையில், தான் தனுஷிடம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்காத நிலையில், அங்கே சில பல கோடிகள் குறைக்கப்பட்டு இருக்கும். அதன் காரணமாகத்தான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்படி கொந்தளிக்கின்றனர் எனக் கூறியுள்ளார். சிம்புவின் போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு அடுத்து தனுஷ் படம் இயக்க வாய்ப்புக் கொடுத்தார். சமீபத்தில், அஜித் படத்தை மிஸ் செய்ததும் விக்னேஷ் சிவனின் தில்லு முல்லு வேலையால் தான் என்றும் தனுஷ் நிச்சயம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது உரிய நடவடிக்கை எடுப்பார் எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











