அவங்களை மட்டும் கொண்டாடுறாங்க.. கொஞ்சம்கூட விஸ்வாசமே இல்லை.. சூர்யா பற்றி பிரபலம் ஓபன் டாக்

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. இதன் காரணமாக அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க சூர்யா நடத்திவரும் அகரம் ஃபவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

சிவகுமாரின் மகனான சூர்யா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர். ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். சூர்யா நடித்து திரையரங்குகளில் வெளியாகி கடைசியாக ஹிட்டான படம் எதுவென்று அவரிடம் கேட்டால் அவராலேயே பதில் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இருக்கிறது அவரது மார்க்கெட்டின் தற்போதைய நிலவரம்.

கங்குவா, ரெட்ரோ: சிவா இயக்கத்தில் அவர் நடித்திருந்த கங்குவா திரைப்படத்துக்கு ஓவர் ஹைப்பை ஏற்றியிருந்தார்கள். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது. தயாரிப்பாளருக்குமே பெருத்த நஷ்டத்தை படம் ஏற்படுத்திவிட்டதாகத்தான் திரைத்துறையில் பேச்சுக்கள் வலுத்திருக்கின்றன. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படமும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு சூர்யா: இப்போதைக்கு அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சில வாரங்களுக்கு முன்னர்தான் படத்தின் டீசர் வெளியானது. அதுவும் சுமார்தான் என்ற நிலையில்தான் இருந்தது. இதுதவிர்த்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார் அவர். எப்படியாவது ஒரு சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்துவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார் அவர்.

Bismi reveals the reason behind Suriya s isolation from the media
Photo Credit:

அகரம் சூர்யா: இதற்கிடையே சூர்யாவை அவரது திரை வாழ்க்கையை வைத்து விமர்சிப்பவர்கள்கூட பெர்சனல் வாழ்க்கையை கொண்டாடுவார்கள். ஏனெனில் அவர் நடித்தோமா சம்பாதித்து தனது குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டோமா என்று இல்லாமல்; ஏழை மாணவர்களை படிக்க வைக்க அகரம் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் படித்து எக்கச்சக்க பேர் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

பிஸ்மி பேட்டி: நேற்று முன்தினம்தான் அந்த அமைப்பின் 15ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அகரம் மூலம் பயன்பெற்ற பலரும் கலந்துகொண்டது நெகிழ்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் சூர்யா குறித்து பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சூர்யா முன்பெல்லாம் மீடியாக்களிடம் ஃப்ரெண்ட்லியாகத்தான் இருந்தார். ஆனால் மீடியாவிலிருந்து ஒதுங்கியே இருக்கும் ரஜினி, அஜித்தை கொண்டாடுகிறார்கள்.

விஸ்வாசம் இல்லை: விஜய்யும் இப்போது மீடியாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவரை கொண்டாடுகிறார்கள். நாம் மீடியாக்களிடம் ஃப்ரெண்ட்லியாகத்தான் இருந்தாலும் நம்மை கொண்டாட மறுக்கிறார்களே. அவர்களுக்கு விஸ்வாசமே இல்லை என முடிவெடுத்துதான் மீடியாவிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். கோயிலைவிட மருத்துவமனைகள் முக்கியம் என ஜோதிகா சொன்னது, ஜெய்பீம் படத்தில் இருந்த அக்னி சட்டி உள்ளிட்டவைகளால் ஒருதரப்பினர் சூர்யா மீது வன்மத்தை கக்குகிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X