நயன்தாராவின் அந்த முடிவுக்கு சிம்புதான் காரணமாம்.. கொளுத்திப்போட்ட பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். இப்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்க்கையையும், தொழிலையும் நகர்த்திவருகின்றனர். அதேசமயம் தன்னுடைய பட ப்ரோமோஷன்கள் மற்றும் இதர சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நயன் கலந்துகொள்வது அபூர்வமாகி இருக்கிறது. அதற்கு முழுக்க முழுக்க சிம்புதான் காரணம் என்று பத்திரிகையாளர் பிஸ்மி கொளுத்திப்போட்டிருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ரூல் செய்துவருகிறார் நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மட்டும் முதலில் கவனம் செலுத்திவந்த அவருக்கு இரண்டு காதல் தோல்விகள் ஏற்பட்டன. வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் ஏற்பட்ட காதல் சில காரணங்களால் பிரேக் அப் ஆனது. அதனையடுத்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்டார். அந்தக் காதலுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார்.

திருமணம்: ஆனால் அந்தக் காதலும் பாதியில் முறிந்தது. அதனையடுத்து சில காலம் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க ஆரம்பித்தார்கள். பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்த அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு; வாடகை தாயை வைத்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றனர். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஃபார்மில் நயன்: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் அவர் கடைசியாக அன்னபூரணி (75ஆவது படம்), ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றி அன்னபூரணி படம் தோல்வியையும், ஜவான் படம் வெற்றியையும் பெற்றன. இப்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஹிந்தியிலும் ஒரு படத்தில் அவர் கமிட்டாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோ நிகழ்ச்சிகள்: இதற்டையே நயன்தாரா தனக்கென்று ஒரு கொள்கையை கொண்டிருக்கிறார். அதாவது தன்னுடைய பட ப்ரோமோஷனுக்கோ, இல்லை இதர சினிமா நிகழ்ச்சிகளிலோ பெரும்பாலும் கலந்துகொள்ளமாட்டார். அதேசமயம் சமீபத்தில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா பட விழாவில் கலந்துகொண்டு ஆச்சரியமூட்டினார் அவர். இந்தச் சூழலில் நயன்தாரா ஏன் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: பிஸ்மி அளித்த பேட்டியில் பேசுகையில், "ஒருமுறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நயன்தாரா சென்றிருந்தார். அவருக்கென்று ஒரு ஷோஃபா போடப்பட்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது முன்னாள் காதலர் நடிகர் சிம்பு; நயனின் பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டார். அது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மெசேஜ் செய்து வேறு இடத்தில் சென்று அமர்ந்தார். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் இப்படி தனக்கு சங்கடம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடக்கலாம் என்பதால்தான் அவர் பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











