Nayanthara: டைரக்டர் சிவாவை அந்த விஷயத்திற்காக டார்ச்சர் செய்த நயன்தாரா.. பிஸ்மி ஷேரிங்ஸ்!
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்து இவரது பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நயன்தாரா அட்லி இயக்கத்தில் இணைந்து நடித்திருந்த ஜவான் படம் ரிலீசாகி 1000 கோடி கிளப்பில் இணைந்திருந்தது.
திருமணமாகி, வாடகை தாய் முறையில் இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் நயன்தாரா. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ஆவணப்படம் வெளியான நிலையில், அதுகுறித்த அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்தார் நயன்தாரா. தனுஷ் தன்னிடம் சில காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வரும் நயன்தாரா பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். அவருடைய திருமணம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நயன்தாராவின் ஆவணப்படம் வெளியானது. நயன்தாராவின் திருமணத்தையொட்டியே இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழிந்து வெளியாகி உள்ளது.
ஆவணப்பட விவகாரம்:இதற்கு காரணம் நடிகர் தனுஷ்தான் என்று சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் நயன்தாரா. அவர் தயாரிப்பாளராக செயல்பட்ட நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகளை அந்த ஆவணப்படத்தில் சேர்த்ததற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் 50 எபிசோட்கள் ஒளிபரப்பானால் அதில் 45 எபிசோடுகள் தன்னை பற்றியதாகத்தான் இருக்கும் என்றும் தன்னை வைத்து அவர்கள் நிகழ்ச்சியை உருவாக்கி காசு பார்ப்பதாகவும் நயன்தாரா தனது சமீபத்திய பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.
லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில் விவகாரம்: மேலும் லேடி சூப்பர்ஸ்டார் என்ற டைட்டிலை போட வேண்டாம் என்று தான் தயாரிப்பாளர்களிடம் கெஞ்சுவேன் என்றும் நயன்தாரா தன்னுடைய பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது வலைபேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி உள்ளிட்டவர்கள் பேசியுள்ளனர். நயன்தாராவின் இந்த பேச்சை சுட்டிக் காட்டியுள்ள அவர்கள், அவரது இந்த பேச்சை அப்பாவி மக்கள் நம்ப வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உண்மை என்ன என்பது சினிமா உலகத்தினருக்கும் குறிப்பாக அவரை வைத்து படமெடுத்தவர்களுக்கு தெரியும் என்றும் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் இவர்கள் பேசியுள்ளனர்.
டார்ச்சர் செய்த நயன்தாரா: தன்னுடைய படங்களுக்காக ஒப்பந்தம் போடும்போது லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை இணைப்பது குறித்தும் அதில் அவர் குறிப்பிடுவார் என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தின்போதும் இதுபோன்ற ஒரு பஞ்சாயத்து நடந்ததாகவும் படம் நிறைவடைந்தவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகி நயன்தாரா இதுகுறித்து பேசியதாகவும் பிஸ்மி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அண்ணாத்த படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்பதால் இவ்வாறு போட முடியாது என்று சன் பிக்சர்ஸ் கைவிரித்ததாகவும் தொடர்ந்து படத்தின் இயக்குநரை இந்த விஷயத்தில் நயன்தாரா டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தை வெளியிடுவாரா?: இதையடுத்து சன் பிக்சர்சிடம் சிவா இதற்கு சிபாரிசு செய்ததையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் போடப்பட்டதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் இதுபோன்ற உண்மைக்கு மாறாக பேசும் நயன்தாரா, தன்னுடைய கடைசி 10 படங்களின் ஒப்பந்த காப்பியை சமூக வலைதளங்களில் வெளியிடுவாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











