ஓவர் ஆட்டமா இருக்கே.. வெளிநாடுகளில் வடிவேலு செய்யும் அலப்பறைகள் தெரியுமா?

சென்னை: Vadivelu - (வடிவேலு) வெளிநாடுகளில் வடிவேலு செய்யும் அலப்பறைகள் குறித்து தற்போது தெரியவந்திருக்கிறது.

நகைச்சுவையில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் வெடித்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகுகிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து நடித்து அதகளம் செய்தார்.

Bismi Shares secret about Actor Vadivelu

பஞ்சாயத்து: வடிவேலுவின் கேரியர் உச்சத்தில் இருந்தபோது அரசியல் மேடையில் ஏறினார். அவர் என்று அரசியல் மேடை ஏறினாரோ அன்றிலிருந்து அவரது கேரியர் இறங்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதையே தயாரிப்பாளர்கள் தவிர்த்தனர். இதனால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் வடிவேலு. அதுமட்டுமின்றி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்தும் சேர்ந்துகொள்ள அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

ரீ என் ட்ரி: ஒருவழியாக வடிவேலுவுக்கு இருக்கும் பஞ்சாயத்துகள் பேசி சரி செய்யப்பட மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது. இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜின் மாமன்னன், பி.வாசுவின் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மீண்டும் ஆட்டம்: வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக வருவதில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போடுகிறார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது. இதனையடுத்து வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என பலர் கூறினர்.

Bismi Shares secret about Actor Vadivelu

வெளியேற்றப்பட்ட வடிவேலு: சூழல் இப்படி இருக்கும் புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படவிருக்கிறது. இப்படத்துக்கு முதலில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் அவர் ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் போட உடனடியாக அவரை படத்திலிருந்து வெளியேற்றியதாம் படக்குழு.

வடிவேலுவின் அலப்பறைகள்: வடிவேலுவை பொறுத்தவரை உள்ளூரில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்றாலும் ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போடுவாராம். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துக்காக லண்டனுக்கு சென்றிருந்தபோது அவருக்கு ஸ்டார் ஹோட்டலில்தான் ரூம் போடப்பட்டிருந்ததாம். ஆனால் ஹோட்டலுக்கு சென்ற வடிவேலு அங்கிருக்கும் ஒவ்வொரு ரூமாக திறந்து காட்ட சொல்லி அதன் பிறகுதான் ரூமை ஓகே செய்தாராம். அதுபோல் இந்தப் படத்துக்கும் நடந்தால் என்ன செய்வது என்ற யோசனையில்தான் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X