குஷ்பு விஷாலை திட்டம்போட்டு காலி செய்துவிட்டார்.. பிஸ்மி பேச்சால் பதறும் விஷால் ரசிகர்கள்!
சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்த படம் மதகஜராஜா. இந்தப் படத்தினை, சுந்தர். சி இயக்கியுள்ளார். படத்தினை 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பொங்கலுக்கு அதுவும் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான வேலைகளைச் செய்து வருகின்றது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஷால், உடல்நிலை மோசமாக இருந்ததால், அது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இப்படியான நிலையில் விஷாலின் இந்த நிலைக்கு காரணமே குஷ்பு மற்றும் சுந்தர் சி தான் என வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகவுள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சதா நடனமாடியுள்ளார். படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.

படத்தில் ஒரு பாடலை விஷாலே பாடியுள்ளார். தற்போது இந்த பாடலும், படத்தின் ட்ரைலரும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் விஷால், இயக்குநர் சுந்தர் சி, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கடுமையான உடல்நல பாதிப்புடன் நடிகர் விஷால் வந்திருந்தார். குறிப்பாக அவரால் கையில் மைக்கையே பிடிக்க முடியவில்லை. மேலும் அவரால் தனது கண்ணாடியைக் கழட்டி கூட மீண்டும் போடமுடியவில்லை. அந்த அளவுக்கு அவருக்கு கை நடுக்கம் இருந்தது. விஷாலின் இந்த கைநடுக்கத்திற்குக் காரணம் அவருக்கு வந்துள்ள வைரல் காய்ச்சல் என ஒருபுறம் கூறினாலும், மறுபுறம், அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார் எனவும் ஒரு பேச்சு பரவி வருகின்றது.

விஷால்: குறிப்பாக, பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்கும்போது, அவருக்கு ஏற்பட்ட தலைவலியைச் சமாளிக்க, தினமும் மது அருந்தத் தொடங்கியுள்ளார். அதன் பின்னர், அதுவே அவருக்கு பழக்கமாக மாறிவிட்டது. மேலும் சில நேரங்களில் போதை அளவுக்கு மீறிப் போகும் அளவுக்கு போதைப்பொருட்களை விஷால் எடுக்கப் பழகிவிட்டார் எனவும் பலர் கூறி வருகின்றார்கள்.

பிஸ்மி: இப்படியான நிலையில், விஷால் குறித்து வலைபேச்சு பிஸ்மி கூறியுள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது, விஷாலின் குடும்பத்தினர்தான். அவர் போதைக்கு பழக்கமாகிவிட்டார் என்றால் அவரை அதில் இருந்து மீட்கும் வேலையைச் செய்யவேண்டும். அதேபோல், விஷால் குறித்து பலவிதமான கருத்துக்கள் தற்போது உலா வருகின்றது. அப்படி இருக்கும்போது, விஷால் தரப்பில் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

குஷ்பு - சுந்தர் சி: படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொள்ள வந்துள்ளார் என்றால், அவரது நிலையைப் பார்த்துவிட்டு, அவரை, குஷ்புவும் சுந்தர் சி- யும் வீட்டிற்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதுபோல் எதுவும் செய்யாமல், விஷாலை தங்களது படத்தின் வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் விஷாலின் பெயர்தான் கெட்டுப்போயுள்ளது" எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











