Suriya: சூர்யாவுக்கு மட்டும் இல்லை.. தமிழ் சினிமாவுக்கே இவருதான் ரொம்ப ஆபத்தானவர்.. பிஸ்மி காட்டம்!
சென்னை: கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர், ஒட்டுமொத்த படக்குழுவும் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இதில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வரும் கருத்து என்றால் கங்குவா படத்தை திட்டமிட்ட இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இரண்டு கட்சி எனும் காலி செய்து விட்டார்கள் என குற்றம் சுமத்தி வந்தார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் யூடியூபருமான பிஸ்மி கூறியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இது தொடர்பாக பிஸ்மி பேசுகையில், "தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது நடிகர்களுக்கு பக்கத்தில் இருக்கும் ஜால்ராக்கள் தான். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் தனஞ்ஜெயன் போன்ற நபர்கள் தமிழ் சினிமாவுக்கும் ஆபத்தானவர்கள் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் ஆபத்தானவர்கள். ஒரு நடிகர் தவறு செய்யும் போது அவருக்கு அருகில் இருப்பவர்கள் அந்த தவறை எடுத்துக் கூறி சுட்டிக்காட்டி பேசும்போது தான் அந்த தவறை இருந்து நடிகர் தன்னை திருத்திக் கொண்டு வெளியே வருவார். அந்த நடிகரிடம் நீங்கள் தவறே செய்யவில்லை தவறு செய்தது எல்லாம் மற்றவர்கள் தான் என கூறும் போது அந்த நடிகர் செய்த தவறு மூடி மறைக்கப்படுகிறது.

படத்தை பொருத்தவரை படத்தில் இருக்கக்கூடிய கதை மற்றும் திரைக்கதை தான் பிரச்சனை. அதை விட்டுவிட்டு மற்ற இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் தான் திட்டமிட்டு கங்குவா படத்தை தோல்வி படமாக மாற்றி விட்டார்கள், வன்மத்துடன் பிரச்சாரம் செய்து படத்தை காலி செய்து விட்டார்கள் எனக் கூறுகிறார்.
விஜய்- அஜித்: அவர் எந்த இரண்டு கட்சிகளை கூறுகிறார் என அனைவருக்கும் தெரியும். இரண்டு ரசிகர்கள் என அவர் கூறுவது விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆகியோரை தான். அவரது இந்த கருத்தை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம். சூர்யா, அஜித் மற்றும் விஜய்க்கு சமமான போட்டியாளர் கிடையாது. சூர்யா விஜய்க்கு சமமான போட்டியாளர் என்றால் விஜய் ரசிகர்கள் சூர்யாவின் படத்தை திட்டமிட்டு காலி செய்ய முயற்சி செய்வார்கள் என கூறலாம். அதே போல் சூர்யா அஜித்துக்கு சமமான போட்டியாளர் என்றால் அஜித் ரசிகர்கள் சூர்யாவின் படத்தை திட்டமிட்டு காலி செய்ய முயற்சி செய்வார்கள் என கூறலாம்.

கள நிலவரம்: கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்றால் முதல் இடத்தில் விஜய், அதற்கடுத்த இடத்தில் ரஜினி, அதற்கு அடுத்து அஜித் என இப்படித்தான் இருக்கிறது. இதில் சூர்யா மிகவும் பின்தங்கியே உள்ளார். இன்னும் சொல்லப்போனால் 11 ஆண்டுகளாக வெற்றியே கொடுக்காத கதாநாயகனாக சூர்யா உள்ளார். நிலவரம் எப்படி இருக்கும்போது விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் எதற்காக சூர்யா படத்தை காலி செய்ய வேண்டும் என நினைக்கப் போகிறார்கள்.

சூர்யா: தனஞ்ஜெயன் கூறுவது சரியானது என வைத்துக் கொண்டாலும் கேரளாவிலும் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கங்குவா படத்தை யார் தோல்வி படமாக மாற்றினார்கள்?. உலகம் முழுவதும் இந்தப் படத்தை யாரும் பார்க்கவில்லையா? இவர் சொல்லுவது அபாண்டமான கருத்து என மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது சூர்யாவுக்கு தெரியுமா என எனக்கு தெரியவில்லை. தனஞ்ஜெயன் பொய் சொல்லுகிறார் என சூர்யா புரிந்து கொண்டால் இந்த மாதிரியான ஜால்ராக்களை ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த கட்ட வேலையை செய்யலாம். மாறாக தனஜெயன் கூறுவதை சூர்யா நம்பி விட்டால், பாகுபலி போன்ற படத்தில் நாம் நடித்தோம் மற்றவர்கள் தான் திட்டமிட்டு இந்த படத்தை தோல்வி படமாக மாற்றி விட்டார்கள் என சூர்யா நினைத்து விட்டால், வாழ்க்கையில் இனி அவருக்கு வெற்றி படமே கிடையாது என்பதை உறுதியாக சொல்லலாம்" எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











