அமரனுக்குப் பின் அடக்கி வாசிக்காமல் ஆட்டம் போடும் S.K.. படப்பிடிப்பு தள அட்ராசிட்டீஸ்.. பிரபலம் ஷாக்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு வந்த, அயலான், தீபாவளிக்கு வந்த அமரன் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து வெற்றிப் படமாக மாறியது. குறிப்பாக அமரன் படம் அவரது சினிமா வாழ்க்கையில் அவரை உச்சத்திற்கு கொண்டு வந்து அமர்த்திய படம் எனலாம். இதையடுத்து இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் அவரது 23வது படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது சுதா கொங்கராவின் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகின்றார் எஸ்.கே. இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இவரது நடவடிக்கைகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது, ஏற்கனவே டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்கரா இயக்கத்தில் இரு படமும் உருவாகி வருகின்றது. இதில் சுதா கொங்காரா படம் சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார், இசை அமைக்கின்றார். இது ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது படமாகும்.

sivakarthikeyan sudha kongara bismi

இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி அதன் பின்னர் அந்தப் படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் இந்தப் படத்தில் நடிக்க தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் முயற்சி செய்ததாக பேச்சுகள் எழுந்தது. தற்போது இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கமிட் ஆகி நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கின்றார்.

பிஸ்மி : படத்திற்கு முதலில் புறநானூறு என பெயர் வைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்திற்கு 1965 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. படத்தின் படப்பிடிப்பு தற்போது, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயன் நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு இருப்பதாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

S.K: இது தொடர்பாக அவர் பேசுகையில், “ பொதுவாக படப்பிடிப்புத் தளத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், இயக்குநர் என இப்படி வரிசையாகத்தான் கேரவன்கள் இருக்கும். ஆனால், இங்கு சிவகார்த்திகேயன் கேரவனுக்கு பக்கத்தில் பெரிய இடைவெளி உள்ளதாம். அங்கு சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தைப் போட்டுள்ளாராம். இது படப்பிடிப்புத் தளத்தில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கின்றது என பேசி வருகின்றார்கள். இதற்கு முன்னர் எந்த நடிகரும் இதுபோல செய்தது இல்லை.

அட்ராசிட்டி: மேலும் படத்தில் நடிக்கின்ற ஜெயம் ரவி, தனக்கு இரண்டு உதவியாளர்களுடன் அவரே வருகின்றார். ஷாட் சொல்லும்போது வந்து நடித்துக் கொடுத்துவிட்டு கேரவனுக்கு போய்விடுகின்றார். சினிமாவில் சிவகார்த்திகேயனை விட அனுபவம் வாய்ந்தவர் ஜெயம் ரவி, அவரே அமைதியாக இருக்கின்றார். ஆனால் சிவகார்த்திகேயன், அமரன் பட வெற்றிக்குப் பின்னர் அடக்கி வாசிக்காமல் ஆட்டம் போடுகின்றார்” எனக் கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X