கில்லி ரீ ரிலீஸ் வசூல் இத்தனை கோடியா?.. தீனா, பில்லா ரீ ரிலீஸ் வசூல் இவ்ளோதானா?.. பிஸ்மி ரிப்போர்ட்!
சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் துவண்டு கிடந்த தியேட்டர் ஓனர்களுக்கு ரீ ரிலீஸ் படத்தின் மூலமாகவும் மிகப்பெரிய வசூலை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.
மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் ஆவேசம் போன்ற படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தமிழ் சினிமாவை காப்பாற்ற யாரும் இல்லையா என விமர்சனங்கள் கிளம்பி வந்த நிலையில் விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது.

கில்லி திரைப்படம் மற்றும் அதற்கு போட்டியாக அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான தீனா மற்றும் பில்லா படங்கள் எந்த அளவுக்கு வசூல் செய்தன என்பது குறித்து பிஸ்மி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறிய வசூல் அறிக்கை குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
25 கோடி வசூல்: கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியான நிலையில் அந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வந்து படத்தைப் பார்த்து இரண்டு வாரங்கள் அந்த படத்தை தியேட்டரில் வெற்றிகரமாக ஓட வைத்து 25 கோடி ரூபாய் வரை வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக பேசிய பிஸ்மி கில்லி திரைப்படம் 225 தியேட்டர்களில் வெளியானது என்றும் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளதாகவும் இரண்டு வாரங்கள் கழித்து இன்னமும் 100 தியேட்டர்களுக்கு மேல் கில்லி படம் ஓடி வருவதாக கூறியுள்ளார். மேலும், 900 இருக்கைகள் கொண்ட சத்யம் தியேட்டரே ஹவுஸ்ஃபுல் ஆக ஓடி வருவதாகவும் கில்லி படத்தால் தியேட்டர் ஓனர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வருவதாக கூறியுள்ளார்.
தீனா, பில்லா சேர்ந்து வந்தே: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா மட்டும் பில்லா படங்கள் வெளியாகின. வெளிநாடுகளில் மங்காத்தா திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் அந்த படத்தை மறு வெளியீடு செய்ய சன் டிவி நிறுவனம் தயாராக இல்லை. தீனா திரைப்படம் அதிகமாக ஒரு கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் செய்துள்ளது. பில்லா திரைப்படம் 83 லட்சம் முதல் நாளில் வசூல் செய்தது. ஆனால் இரண்டு படங்களும் சேர்த்தும் விஜயின் கில்லி படத்தி்ன் ரீ ரிலீஸ் வசூலுக்கு கிட்ட கூட நெருங்க முடியவில்லை என பிஸ்மி கூறியுள்ளார்.
ஒரே படமாக வெளியிட்டு இருக்கலாம்: கில்லி படத்தை போல அஜித்தின் பிறந்தநாளுக்கு தீனா அல்லது பில்லா என ஏதாவது ஒரு படத்தை வெளியிட்டு இருக்கலாம். ஆனால், ஒரு நாள் வசூல் மட்டுமே போதும் என நினைத்த நிலையில், 2 படங்களை ஒன்றாக வெளியிட அஜித் ரசிகர்களுக்கே அந்த படங்களை 2வது நாள் பார்க்க பிடிக்கவில்லை. முதல் நாள் இருந்த கொண்டாட்டங்களும் அலப்பறைகளும் அப்படியே காணாமல் போய் விட்டன என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











