காதில் பூ சுற்றும் கங்குவா டீம்.. சூர்யா முகமே சரியில்லை.. டிக்கெட் புக்கிங் நிலைமை குறித்து பிஸ்மி!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதன் பின்னர் சூர்யா தயாரிப்பில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான சர்ஃபிரா படமும் பெரிதாக ஓடவில்லை.

மெய்யழகன் திரைப்படம் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில், தியேட்டர்களில் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தின.

kanguva suriya bismi

தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவுக்கு அடி மேல் அடி விழுந்து வரும் நிலையில் கங்குவா திரைப்படம் 2000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என அதிக அளவில் ஹைப்பை கிளப்பிய நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்து சூர்யா தரப்பு பேசுவது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலைதான் என சினிமா பத்திரிகையாளர் அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தடைகளைத் தாண்டி: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14-ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. நேற்று நள்ளிரவு அந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்து இடங்களிலும் ஓபன் செய்யப்பட்டுள்ளது. கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது என ஏகப்பட்ட வழக்குகள் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் குவிந்து வரும் நிலையில், அதை ஒவ்வொன்றாக சரிசெய்து ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பல தடைகளைத் தாண்டி நாளை படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்.

பாலிவுட்டில் எழுந்த கேள்வி: கங்குவா படத்துக்கு ஹிந்தியில் பெரிதளவில் டிக்கெட்டுகள் புக் ஆகவில்லை ஏன் என்கிற கேள்வி நேற்று எழுப்பப்பட்டது. மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சூர்யாவிடம் அந்தக் கேள்வி வந்தபோது, அவர் சற்றே அப்செட் ஆனார். உடனடியாக அதற்கு பதில் அளித்த ஞானவேல் ராஜா பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ்களில் இன்னமும் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகவில்லை என்றும் விரைவில் தொடங்கும் என்றார். டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையிலும், பாலிவுட்டில் இதுவரை பெரிதாக புக்கிங் ஆகவில்லை என்கின்றனர்.

காதில் பூ சுற்றும் வேலை: கங்குவா படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்து சமூக வலைத்தளங்களில் ஸ்க்ரீன் ஷாட்டுகளுடன் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு வழக்கம் போல காதில் பூ சுற்றும் வேலையைத்தான் பார்த்து வருகிறது என்றும் கங்குவா படத்தின் டிக்கெட் புக்கிங் பெரிதளவில் இல்லை என்பதுதான் நிதர்சனம் என பிஸ்மி கூறியுள்ளார்.

தனஞ்செயன் கோரிக்கை: கங்குவா திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது தான் தொடங்கியுள்ளது. விரைவில் டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்கும். கங்குவா படத்தைப் பற்றியும் அதன் டிக்கெட் புக்கிங் பற்றியும் நெகட்டிவான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படி வன்மத்தை கக்க வேண்டாம். "கங்குவா படத்தை பொருத்தவரைக்கும்" நாம் அனைவரும் கொண்டாடுவோம், 14ம் தேதி முதல் என படத்துக்கு அனைவரும் சப்போர்ட் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X