ஆரம்பித்து வைத்த விஜய்.. முடித்துவைத்த விஜய் மகன்.. LYCA சோலியை முடித்துவிட்டார்கள்.. பிஸ்மி அட்டாக்
சென்னை: லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இவர்கள் தற்போது, பிரித்விராஜ் சுகுமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படமான எம்புரான் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இப்படியான நிலையில் லைகா நிறுவனம் பட தயாரிப்பில் இருந்து முற்றிலும் விலகப்போவதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
லைகா நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடித்த கத்தி படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக களமிறங்கியது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், இவருக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படியான நிலையில் கத்தி படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றது. ஆனாலும் லைகா நிறுவனம் தயாரித்த கத்தி படம் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது. மேலும் மாஸ் ஹீரோவான விஜய்யை வைத்து தங்களது முதல் படத்தை தயாரித்ததால், பலரது கவனத்தையும் பெற்றது.
இந்த படத்திற்குப் பின்னர், லைகா நிறுவனம் விஜய்யுடன் மீண்டும் இணையவில்லை. அதன் பின்னர் விஜய்யுடன் இணைந்து படம் செய்த, ஏ.ஜி.எஸ் நிறுவனம் கூட விஜய்யுடன் மீண்டும் இணைந்து படம் செய்தது. லகா நிறுவனம் சின்ன படங்கள் தொடங்கி பெரிய படங்கள் வரை பல படங்களுக்கு ஒரே நேரத்தில் தயாரிப்பில் ஈடுபட்டு, வெற்றிகளைக் குவித்தது. இதனால், பல முன்னணி நடிகர்களின் கால்ஷீட் இவர்களிடம் இருந்தது.

லைகா: ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், லைகா தயாரித்த படங்கள் அடுத்தடுத்து வணிக ரீதியாக தோல்வியை பெற்றது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் பாகங்கள் இரண்டுமே வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்த படங்கள்தான். கடைசியாக லைகா தயாரித்து, அஜித் நடித்த விடாமுயற்சி படமும் தோல்விப் படம் தான். கடந்த ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படம் லைகாவுக்கு பெரிய அடியைக் கொடுத்தது எனலாம்.

தோல்விப் படங்கள்: இப்படி தொடர்ந்து தோல்விப் படங்களால் நஷ்டங்களை சந்தித்து வரும் லைகா நிறுவனம், பட தயாரிப்புகளில் இருந்து விலகவுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறுகிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் ஒன்றில், " லைகா தற்போது மூடு விழாவை நோக்கி சென்று கொண்டுள்ளது. லைகா தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தான் தயாரித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இந்த படத்துடன் சினிமா விட்டு விலகுகிறது என்றால், லைகா நிறுவனம் வரலாறு படைக்க உள்ளது எனக் கூறலாம்.

மோசமான வரலாறு: அதாவது லைகா நிறுவனத்தின் முதல் படம் கத்தி. அந்த படத்தில் நடித்தவர் விஜய். விஜய்யை வைத்து தங்களது முதல் படத்தை தயாரித்தவர்கள், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை வைத்து அவர்களின் கடைசி படத்தை தயாரித்து வருகிறார்கள் எனக் கூறலாம். சுபாஸ்கரனுக்கு திரையுலகம் குறித்து எதுவும் தெரியவில்லை. அதனால்தான் அவர் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறார்" இவ்வாறு பிஸ்மி தெரிவித்துள்ளார். பிஸ்மியின் இந்த பேச்சு தற்போது திரைத்துறை வட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.
லைகாவின் தயாரிப்பில் கடைசியாக வெளியான படம், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 280 கோடிகள். இதில் அஜித் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் என படத்தின் சம்பளத்திற்கு மட்டும் மொத்தம் ரூபாய் 140 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் தயாரிப்புக்கு ரூபாய் 60 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், அஜித்தின் சம்பளத்திற்கு வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் ரூபாய் 50 கோடிகள், மற்றவைகளுக்கு வாங்கிய தொகைக்கு வட்டி ரூபாய் 20 கோடிகளும் என வட்டி மட்டும் ரூபாய் 70 கோடிகள் லைகா நிறுவனம் செலுத்தியுள்ளது. அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூபாய் 10 கோடிகள் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விடாமுயற்சி படத்தை மொத்தம் ரூபாய் 280 கோடிகள் செலவில் படத்தை லைகா நிறுவனம் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி: படம் ரிலீஸ்க்கு முன்னர் நடைபெற்ற வியாபரத்தில் மொத்தம், ரூபாய் 156 கோடிகள் வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் படம் ரிலீஸ்க்கு முன்னர் லைகாவுக்கு ரூபாய் 124 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டிருந்ததை ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் விடாமுயற்சி மொத்தம் ரூபாய் 81 கோடிகள் வசூல் செய்துள்ளது. இதில், லைகா நிறுவனம் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 3.5 கோடிகள் ரிலீஸ் ஷேர் போக, லைகா நிறுவனத்திற்கு கிடைத்தது, ரூபாய் 31.5 கோடிகள் மட்டுமே.
ஷேர்: அதேபோல் வெளிநாட்டு வசூல் மூலம் கிடைத்த ஷேர் ரூபாய் 14 கோடிகள். மொத்தம் கிடைத்த ஷேர் மட்டும் ரூபாய் 48 கோடிகள். இதில் விநியோகஸ்தர்களுக்கு திருப்பித் தந்த தொகை, ரூபாய் 34 கோடிகள். இதன் மூலம் லைகாவின் கையில் மீதம் இருந்த தொகை ரூபாய் 14 கோடிகள் மட்டுமே.
நஷ்டம்: படம் ரிலீஸ்க்கு முன்னர் லைகாவுக்கு இருந்த நஷ்டத் தொகை, ரூபாய் 124 கோடிகளில் ரிலீஸ்க்குப் பின்னர் வந்த ஷேர் ரூபாய் 14 கோடிகளைக் கழித்தால், நஷ்ட தொகையாக ரூபாய் 110 கோடிகள். இது மட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் கதை ஹாலிவுட் படங்களை தயாரிக்கும் பாரமவுண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதை. இதனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காபிரைட்ஸ் பணம் ரூபாய் 17.5 கோடிகள். இதனால் மொத்தம் நஷ்டத் தொகை ரூபாய் 127.5 கோடிகளாக மாறியதால், லைகாவுக்கு விடாமுயற்சி படத்தின் மூலம் மட்டும் 127.5 கோடிகள் நஷ்டம் ஆகியுள்ளது.
ஏற்கனவே தயாரித்த படங்களால் லைகாவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியன் 2 படத்தால் ஏற்பட்ட நஷ்டம் என்பது லைகா நிறுவனத்தை முடக்கிவிட்டது எனலாம். இப்போது இந்தியன் 3 படத்தில் இருந்து லைகா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் லைகா நிறுவனம் இந்த படத்தில் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியன் 3 படத்தின் மொத்த வரவு செலவு கணக்கும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











