சந்தானத்தின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்.. சூரியின் வெற்றி ரூட் இதுதான்.. பிஸ்மி பேச்சு!

சென்னை: சந்தானம் பல படங்களில் தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்தும் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகன் சூரியாக மாறி தொடர்ந்து வெற்றிகளை குவிக்க என்ன காரணம் என்பது குறித்தும் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து வந்த சந்தானம் முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் படு பிசியாக இருந்து வந்தார். ஒரு நாள் கூட சூட்டிங் இல்லாமல் அவர் இருந்தது கிடையாது. விவேக் மற்றும் வடிவேலுவை பின்னுக்குத் தள்ளி சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Soori Santhanam Bismi Garudan Inga Naan Thaan Kingu

ஆனால், திடீரென அவருக்கு வந்த ஹீரோ ஆசையில் தவறு இல்லை என்றாலும் மக்கள் அவரிடம் எதிர்பார்த்து படத்துக்கு செல்லும் விஷயத்தை சரியாக புரிந்துக் கொள்ளாமல் படங்களில் நடித்து வருவது தான் என பிஸ்மி பேசியுள்ளார்.

மொக்கை போட்ட சூரி: காமெடி பண்ணுகிறேன் என்கிற பெயரில் இங்கிலீஷை தப்பு தப்பாக பேசுவதையே காமெடி என நினைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக சினிமாவில் ஓட்டிக் கொண்டிருந்தார் சூரி. சந்தானத்தை காமெடியில் அவரால் ஒரு படத்தில் கூட வீழ்த்த முடியவில்லை. யோகி பாபு எல்லாம் பின்னாடி வந்து முன்னணி காமெடி நடிகராக மாறிய நிலையில், இதற்கு மேல் காமெடியனாக தொடர முடியாது என்பதை சூரி தெளிவாக தெரிந்து கொண்டு திடீரென தனது ரூட்டை மாற்றி விட்டார்.

சூரியை நம்புறாங்க?: வெற்றிமாறனை தொடர்ந்து அமீர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் சூரியை வைத்து படம் எடுத்து வெற்றி பெற முடியும் என நம்புறாங்க அந்தளவுக்கு விடுதலை மற்றும் கருடன் படங்கள் மூலம் மிகப்பெரிய நம்பிக்கையை இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் சூரி கொடுத்துள்ளார்.

சூரியின் எழுச்சி: காமெடி பெரிதாக தனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு விலகி விட முடியாது என்பதால் நடிக்க கற்றுக் கொண்டார் சூரி. அதுதான் தற்போது அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சசிகுமார், உன்னி முகுந்தன் என பலரும் நடித்திருந்தாலும், ரசிகர்களை தியேட்டருக்கு தொடர்ந்து வரவழைக்க வேண்டும் என்றால் அங்கே சூரி தனது வேலையை சரியாக செய்திருக்க வேண்டும். அவர் செய்ததால் தான் படம் 50 கோடி அளவுக்கு வசூலை ஈட்ட நெருங்கியுள்ளது என பிஸ்மி பேசியுள்ளார்.

சந்தானத்துக்கு பேராசை: சந்தானம் அசைக்க முடியாத காமெடி நடிகராக இருந்த நிலையில், அவர் ஹீரோவானதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், மக்கள் அவரிடம் இன்னமும் நல்ல காமெடிகளை எதிர்பார்த்து சிரித்து படத்தை என்ஜாய் பண்ணலாம் என நினைத்து வருகின்றனர். ஆனால், அவரோ தன்னை அஜித் மற்றும் விஜய் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக முக்கியத்துவம் செலுத்த நினைக்கிறாரே தவிர காமெடியில் கோட்டை விடுவதால் தான் அவரது படங்கள் தொடர்ந்து ஓடாமல் சொதப்பி வருகின்றன.

அதை மட்டும் மாற்றினால்: சூரியை விட சந்தானத்துக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சந்தானம் அதை மற்றும் சற்றே மாற்றிக் கொண்டு கவனமாக காமெடி படங்களை கையாண்டால் மிகப்பெரிய வசூல் வேட்டையை அவராலும் நடத்த முடியும் என பிஸ்மி பேசியுள்ளார். சூரியின் சமீபத்திய வளர்ச்சி சந்தானத்தை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X