கொள்கை எதிரி உடன் தேர்தல் கூட்டணி வைப்பதைவிட அரசியல் விப*சாரம் வேறு எதுவுமில்லை.. விளாசிய பிஸ்மி

சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழல் தேர்தலை நெருங்க நெருங்க மாறிக் கொண்டே உள்ளது. அதுவும் இம்முறை நடிகர் விஜய்யும் அவரது தமிழக வெற்றிக் கழகமும் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் வேற லெவலில் சூடாக உள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தன்னை அறிவித்துக் கொண்டார். மகளிர் தினத்தில் மகளிருக்கான வாக்குறுதிகளை தனது தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து கூறினார்.

ஆனால் மார்ச் 13ஆம் தேதி மதியத்தில் இருந்து அரசியல் வட்டாரத்தில் பரவும் தகவல்கள் அரசியல் களத்தை மேலும் சூடாக்கி உள்ளது. அதாவது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைத்துள்ள தேசிய ஜனநாய கூட்டணியில் இணைய போகிறது என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.

Bismi X Page Post About Tamil Nadu Political Changes Based 2026 Assembly Election

இது தொடர்பாக பாஜக ஆந்திரா துணை முதலைமைச்சராக உள்ள பவன் கல்யாணை வைத்து காய்களை நகர்த்தியது என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. பாஜகவுடன் கூட்டணிக்கு விஜய் தயாராகிவிட்டார் என்று பேச்சுக்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதாவது தவெகவுக்கு 64 சீட்களும் துணை முதலமைச்சர் பதவியும் அளிக்க முன் வந்துள்ளதாகவும், விஜய் தரப்பில் தங்களது மாவட்டச் செயலாளர்களை அழைத்து கருத்து கேட்டதற்கு பெரும்பாலானவர்கள் சரி என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

விஜய் முடிவு: இந்த தகவல் அரசியல் தளத்தில் பெரும் பேசு பொருளாக மாற பலரும் தற்போதே விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதுவும் பாஜகவை தனது ஆரம்பகால அரசியல் மேடைகளிலும் மாநாட்டு மேடைகளிலும் காட்டமாக விமர்சித்தவர் விஜய். அதுவும் பாஜகவை கொள்கை எதிரி என்று தெரிவித்துக் கொண்டும் முழங்கிக் கொண்டும் இருந்தார். தவெகவின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தவெக பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்றும் தெரிவித்தார்கள்.

Bismi X Page Post About Tamil Nadu Political Changes Based 2026 Assembly Election

பிஸ்மி போஸ்ட்: ஆனால் அரசியல் வட்டாரத்தில் வரும் தகவல்கள் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட தவெக ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள நிலையில், பலரும் தங்களது எண்ணங்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இது தொடர்பாக எதுவும் வெளிவரவில்லை. விஜய் தற்போது தமிழக அரசியல் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருப்பதால் அவரைச் சுற்றிய இது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. இப்படி இருக்கையில் பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில், " கொள்கை எதிரி உடன் தேர்தல் கூட்டணி வைப்பதைவிட அரசியல் விபச்சாரம் வேறு எதுவுமில்லை" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். ஆனாலும் இதில் விஜய் என்றோ தவெக என்றோ எங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தவெக பாஜகவுடன் இணைந்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகிவிடும் என்று சிலரும், திமுக அரியணையை இழக்கும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X