Bison Public Review: பைசன் பப்ளிக் விமர்சனம்.. விக்ரமிற்கு பெருமை சேர்த்த துருவ்.. தீபாவளி ஹிட்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானபோதே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படத்தை பிரீமியர் ஷோவில் பார்த்தவர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
ரசிகர் ஒருவர் கூறுகையில், " படம் தொடங்கி 10 நிமிடத்தில் கதையை ஒரு மூடுக்கு செட் செய்துள்ளார். இசை மிகவும் சிறப்பாக உள்ளது. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் படத்தைப் பாருங்கள். சண்டைக் காட்சிகள் அனைத்துமே நம்பகத்தன்மையுடன் எடுக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் 10 பேரை தூக்கி அடித்தாலும் நம்ப முடிகிறது. படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், முதியவர் ஒருவர் கூறுகையில், " விக்ரம் ஒரு படத்தில் பேசாமலேயே தேசிய விருது வாங்கினார். அவருடைய பையன் அந்த கதாபாத்திரத்திற்காக உடம்பை தயார் செய்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருக்கும் நிச்சயம் ஒரு தேசிய விருது கிடைக்கும். அப்பாவுக்கு பெருமை சேர்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், துருவ்வின் கெரியரில் இது ரொம்பவும் முக்கியமான படம் என்ற இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அவரது உழைப்பும் மெனக்கெடலும் திரையில் தெரிகிறது. கபடி என்பது கஸ்டமான விளையாட்டு, இந்திய அணிக்கு தேர்வு ஆவதில் என்ன மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கிறது என்பதை சூப்பராக காட்டியுள்ளார்கள். அமீர் ஒரு 10 நிமிடம் வரும் கேமியோ கதாபாத்திரம் சிறப்பு. லாலும் பிரமாதப்படுத்தி விட்டார். படக்குழுவினருக்கான கூட்டு வெற்றி" என்று தெரிவித்தார்.

தென் மாவட்ட வாழ்வியல்: ரசிகை ஒருவர் கூறுகையில், " மாரி செல்வராஜ் அண்ணனின் ஒவ்வொரு பீஸும் தரம். ஆனால் இந்த படம் அவரது மாஸ்டர் பீஸ். 1990களில் நடந்தது யாருக்கு எல்லாம் தெரியும் என்று தெரியவில்லை. தென் மாவட்டத்தில் இப்போது நடந்து வருவதை ஒரு திரைக்கதையாக உருவாக்கி, படமாக்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மாரி. தென் மாவட்டங்களில் எங்களின் வாழ்வியலை மீண்டும் பதிவு செய்துள்ளார். அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். கபடி நமது நாட்டின் முக்கியமான விளையாட்டு என்பதை ரத்தமும் சதையுமாக கலந்து சொல்லி உள்ளார்கள். ஸ்போர்ட்ஸ் பிளேயர்ஸ் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். துருவ் விக்ரமிற்கு இந்த படம் ஒரு மையில் கல்" என்று தெரிவித்துள்ளார்.
கிளைமாக்ஸ்: அதேபோல் மற்றொரு ரசிகர் கூறுகையில், " படம் ரொம்பவும் நன்றாக உள்ளது. கிளைமாக்ஸ் ரொம்பவும் நன்றாக எடுத்துள்ளார்கள். துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து பைசனாகவே மாறியுள்ளார்கள். ஒட்டுமொத்த படமாகவே நன்றாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் கபடி போட்டு கிளைமாக்ஸ் ரொம்பவும் நன்றாக உள்ளது. பசுபதி ரொம்பவும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

கருத்து சூப்பர்: மற்றொரு ரசிகர் கூறும் போது, " கட்டாயம் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் நன்றாக போகும். படத்தின் மெசேஜ் நன்றாக பிடித்து இருந்தது. மாரி செல்வராஜ் தரமான இயக்குநர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்துள்ளார். துருவ் விக்ரமிடன் இவ்வளவு நடிப்பை மாரி செல்வராஜ் வாங்கியதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். படத்தில் சலிப்பு தட்டும் இடம் என்று எதுவும் இல்லை. தாராளமாக இரண்டாவது முறை கூட பார்க்கலாம் " என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











