என்ன.. தஞ்சாவூர்ல எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டியா.. நடிகை வனிதா மீது பாஜக, காங்கிரஸ் புகார்!
சென்னை: தஞ்சாவூர் பக்கம் எல்லோருக்கும் இரண்டு மனைவிகள்தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை வனிதா மீது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்ததும் செய்தார் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வனிதா தனது கணவரை அபகரித்து விட்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

இரண்டு மனைவிகள்தான்
தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது தரப்பு நியாயத்தை கூறி வருகிறார். இந்நிலையில் அப்படி பேசிய ஒரு வீடியோவில், நாங்க தஞ்சாவூர்.. எங்க அப்பாவுக்கு தஞ்சாவூர்தான். அந்தப் பக்கமெல்லாம் ரெண்டு பொண்டாட்டிங்றது ஒரு விஷயமே இல்லை. ஏன் என் அப்பாவுக்கு கூட இரண்டு மனைவிகள்தான் என்றார்.

எல்லாருக்கும் 2 பொண்டாட்டி
மேலும் மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பண்ணியிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் என்றும் அது தவறு இல்லை என்றும் வனிதா அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

காங்கிரஸ் புகார்
அவரது இந்த பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வனிதாவுக்கு எச்சரிக்கை
இதே போல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பாஜக சார்பில் நடிகை வனிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், இதுகுறித்து வனிதா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











