Parasakthi: CM ஸ்டாலினின் கண்கலங்கிய பராசக்தி ரிவ்யூ வீடியோவுக்கு வெயிட்டிங் - BJP அண்ணாமலை கலாய்

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்நாடு அரசியல் சூழலில் விவாதத்தை உருவாக்கி உள்ளது. இப்படி இருக்கும்போது, தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை படம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பராசக்தி படமானது, இந்தி திணிப்பின் போது அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அதாவது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எப்படி எல்லாம் நடந்து கொண்டது என்று படமாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் உத்தரவினால் காவல்துறையும் மத்திய காவல் படையும், சிறப்பு காவல் படையும் இணைந்து கொண்டு போராட்டக்காரகளை எப்படி எல்லாம் ஒடுக்கியது என்பது குறித்து படமாக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை காங்கிரஸ் கட்சியின் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

BJP Annamalai Troll Tamilnadu CM Stalin For Parasakthi Movie Review

இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை படம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " பராசக்தி படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்தி திணிப்பு எப்படி எல்லாம் செய்யப்பட்டது என்பது குறித்து படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போரை படமாக்கி உள்ளார்கள். படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

முதலமைச்சர் விமர்சனம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை பார்த்துவிட்டு, கண்ணீருடன் ரிவ்யூ போடும் வீடியோவைப் பார்க்க நான் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறேன். மிகச்சிறப்பான படத்தை கொடுத்த இயக்குநர் சுதா கொங்கராவுக்கு வாழ்த்துகள். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

காங்கிரஸில் குழப்பம்: ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், " சாணக்கியா செய்தி உண்மையா ? பார்த்தவர்கள் வீடியோ போட்டு விடுங்க பா . இந்த பராசக்தி படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை விண்ணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

BJP Annamalai Troll Tamilnadu CM Stalin For Parasakthi Movie Review

கூட்டணி: மாணிக்கம் தாகூரின் பதிவுக்கு நடிகையும் அதிமுகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம், " பராசக்தி படத்தை பார்த்தேன். இந்த படத்தில் காங்கிரஸ் தான் இந்தியைத் திணித்தது என்று திமுக உறுதியாக கூறுகிறது. இந்த படம் வெளிப்படையாகவே இண்டியா கூட்டணிக்கும் காங்கிரஸ்க்கும் எதிராக உள்ளது. இண்டியா கூட்டணிக்குள் இந்த படம் பெரிய பிளவை ஏற்படுத்தும் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள், அந்த கூட்டணிக்குள் திமுக இருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X