பாஜக வேட்பாளரான நடிகையின் சொத்து மதிப்பு ரூ. 101 கோடி மட்டுமே

By Siva

Recommended Video

Lok Sabha Election 2019: மதுரா நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்

மும்பை: லோக்சபா தேர்தலில் மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட் நடிகை ஹேமமாலினிக்கு ரூ. 101 கோடி சொத்து உள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதி பாஜக எம்.பி.யாக உள்ளார் பாலிவுட் நடிகை ஹேமமாலினி. வரும் லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி பக்கமே வருவது இல்லை என்று கூறி ஹேமமாலினியை காணவில்லை என்று மக்கள் போஸ்டர் ஒட்டினார்கள்.

இந்நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது சொத்து விபரங்களை அளித்துள்ளார். அவர் சொத்து விபரங்கள் இதோ,

ஹேமமாலினி

ஹேமமாலினி

கடந்த 5 ஆண்டுகளில் ஹேமமாலினியின் சொத்து ரூ. 34.46 கோடி அதிகரித்துள்ளது. அவருக்கு ரூ. 101 கோடி சொத்துக்கள் உள்ளது. முன்னதாக 2014ம் ஆண்டில் அவரிடம் ரூ. 66 கோடி சொத்துக்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திரா

தர்மேந்திரா

ஹேமமாலியின் கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான தர்மேந்திராவின் சொத்து மதிப்பு ரூ. 12.30 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஹேமமாலினியும், தர்மேந்திராவும் தலா ரூ. 10 கோடி சம்பாதித்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

பென்ஸ்

பென்ஸ்

ஹேமமாலினியிடம் மெர்சிடீஸ் மற்றும் டொயோட்டா கார்கள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டில் ரூ. 33. 62 லட்சத்திற்கு மெர்சிடீஸ் காரை வாங்கியுள்ளார். முன்னதாக 2005ம் ஆண்டு ரூ. 4.75 லட்சத்திற்கு டொயோட்டா காரை வாங்கியிருக்கிறார்.

பங்களா

பங்களா

ஹேமமாலினிக்கு ரூ. 6.75 கோடி கடன் உள்ளது. அவரது கணவருக்கு ரூ. 7.37 கோடி கடன் இருக்கிறது. கடன் தொகையில் பெரும்பகுதி மும்பை ஜுஹு பகுதியில் பங்களா கட்ட வாங்கியது. நிலம் வாங்கி ரூ. 58 கோடிக்கு பங்களா கட்டியுள்ளனர். தற்போது அந்த நிலம் மற்றும் பங்களாவின் மதிப்பு ரூ. 100 கோடி ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X