twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஜக தமிழகத்தில் வேரூண்றிவிட்டது.. இனி மலரும்.. வளரும்.. பிரபல இயக்குநர் ஆருடம்!

    |

    சென்னை: தமிழகத்தில் பாஜக வேரூண்றிவிட்டது இனி மலரும் வளரும் பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

    விஷாலின் 32வது படம் குறித்து வெளியான புதிய தகவல்! விஷாலின் 32வது படம் குறித்து வெளியான புதிய தகவல்!

    தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக அமோக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

    விடிய விடிய..

    விடிய விடிய..

    சில தொகுதிகளில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சில தொகுதிகளில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

    பாஜக வேட்பாளர்கள்

    பாஜக வேட்பாளர்கள்

    நடிகை குஷ்பு திமுகவைச் சேர்ந்த எழிலனை எதிர்த்துக் களம் கண்டார். அதேபோல, அண்ணாமலை, திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிட்டனர்.

    4 இடங்களில் வெற்றி

    4 இடங்களில் வெற்றி

    இதேபோல் காரைக்குடியில் ஹெச்.ராஜா, தாராபுரத்தில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 4 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    வானதி சீனிவாசன் வெற்றி

    வானதி சீனிவாசன் வெற்றி

    கோவை தெற்கில் வானதி சீனிவாசன் கமலுடன் கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

    20 ஆண்டுகள் கழித்து

    20 ஆண்டுகள் கழித்து

    இதன் மூலம் 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தமிழக சட்டசபைக்குள் தடம் பதிக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக மலரத் தொடங்கிவிட்டதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பாஜக வேரூண்றிவிட்டது

    பாஜக வேரூண்றிவிட்டது

    அந்த வகையில் பிரபல இயக்குநரான பேரரசும் பாஜகவுக்கு ஆதரவாகவும் வாழ்த்தியும் டிவிட்டியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, பாஜக தமிழகத்தில் வேரூண்றிவிட்டது!
    இனி மலரும்! வளரும்!! என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Perarasu says BJP is rooted in Tamil Nadu.. It will blossoming.. Growing up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X