பாஜகவில் அடுத்தடுத்து ஐக்கியமாகும் தெலுங்கு நட்சத்திரங்கள்

By Shankar

பாஜ கட்சியில் இணைய பல தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாய்க்கு பெரிய பூட்டு மாட்டிக் கொள்வது வழக்கம், எதற்கு வம்பு என்று. கட்சி சார்ந்த நடிகர்கள் மட்டும் பிரச்சார மேடைகளில் பேசுவார்கள்.

ஆனால் ஆந்திராவிலோ.. தேர்தல் நெருங்க நெருங்க நிறைய நட்சத்திரங்கள் கட்சிகளை நாடி வருகின்றனர்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

ஆரம்பத்தில் தெலுங்கு நட்சத்திரங்கள் பலர் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாகக் கூறி வந்தனர். நடிகர்கள் சித்தார்த், விஷால், சமந்தா போன்றவர்கள் வெளிப்படையாக தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

சமந்தா

சமந்தா

இப்போது அத்தனை பேருமே அமைதி காக்கின்றனர். அதிலும் சமந்தா தன் ஆம் ஆத்மி ஆதரவை தூக்கி எறிந்துவிட்டு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரஞ்சீவிக்கு ஷாக்

சிரஞ்சீவிக்கு ஷாக்

இன்னொரு பக்கம் பாஜகவைத் தேடி பெரிய நட்சத்திரங்கள் வந்த வண்ணம் உள்ளனர். முன்பு பவன் கல்யாண் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். இது அவர் அண்ணனும் காங்கிரஸ் தலைவருமான சிரஞ்சீவிக்கு பெரிய ஷாக்.

நாகார்ஜூனா - அமலா

நாகார்ஜூனா - அமலா

அடுத்து நாகார்ஜூனா. இவர் தன் மனைவி அமலாவுடன் பாஜகவில் ஐக்கியமாகிறார். அமலாவுக்கு எம்பி சீட் நிச்சயம் என்கிறார்கள்.

மோகன் பாபு

மோகன் பாபு

ஏற்கெனவே நடிகரும் முன்னாள் எம்பியுமான மோகன் பாபு தன் குடும்பத்தோடு பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். அவர் மகள் லட்சுமி மஞ்சு அல்லது அவருக்கு தேர்தலில் ஒரு சீட் உண்டு என பாஜக தலைமை வாக்களித்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X