10 நாளில் எதுவும் செய்ய முடியாது.. அவருக்கு டைம் கொடுங்க.. முதல்வர் விஜயை சந்தித்த குஷ்பு பேட்டி!

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவரும், நடிகையுடமான குஷ்பு சுந்தர் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, இன்று முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அமைச்சர் ராஜ்மோகன் அவர்களையும் சந்தித்தோம். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதுகுறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். நிச்சயமாக அதை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சரும், அமைச்சர் ராஜ்மோகன் அவர்களும் உறுதி அளித்து இருக்கிறார் என்றார்.

குஷ்பு பேட்டி: என்னுடைய தம்பி விஜயை அந்த இடத்தில் பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்ன். என்னை பார்த்ததும் 'தீதி' என்று அழைத்து என்னை கட்டி அணைத்தார். இதுஎனக்கு உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தற்போது ஒரு தெளிவான அரசு அமைந்துள்ளது. அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். மாமான், மச்சான், சொந்தங்கள் என்று பார்க்காமல் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். அவரை அந்த பொறுப்பில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

CM Vijay Khushbu

பத்து நாளில் செய்ய முடியாது: தொடர்ந்து கோயம்புத்தூர் சிறுமி சம்பவம் குறித்து பேசிய குஷ்பு, இது மிகவும் துயரமான சம்பவம். இந்த சமூகத்தில் இதுபோன்ற மிருகங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. விஜய் முதலமைச்சரான உடனேயே அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களால் செய்ய முடியாத மாற்றத்தை பத்து நாட்களில் எப்படி செய்ய முடியும்? இப்போதுதான் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கு தேவையான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். மக்கள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்தான் அவருக்கு வாக்களித்துள்ளனர் என நடிகை குஷ்பு பேசி உள்ளார். அவருடன் நடிகை குட்டி பத்மினி மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்களும் உடன் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X