Jana Nayagan Censor: ஜன நாயகன் சென்சார் பிரச்னை.. பாஜக குஷ்பு ஒரே வார்த்தையில் முடிச்சுட்டாங்களே!

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜன நாயகன், விஜய் அரசியலில் முழு நேரமாக இயங்க திட்டம் போட்டுள்ளதால் இதுவே அவரது கடைசி படம் என்று அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்குண்டான அனைத்து வேகைகளிலும் படக்குழு செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் படத்தின் ரிலீஸில் தீர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது ஒன்றுதான். அது, சென்சார் சான்றிதழ் பிரச்னை. இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக குஷ்பு பேசுகையில், " ஜன நாயகன் படக்குழுவினர் ஏன் இப்படி பாஜகவை காரணம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. அதில் அவர்களே ஏதோ ஒரு நோக்கத்துடன் இவ்வாறு பேசுவதாக நினைக்கிறேன். சென்சார் சான்றிதழ் வழங்கும் அமைப்பானது, ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதற்கும் பாஜகவுக்கும் சம்மந்தமே இல்லை. உங்கள் படம் என்ன மாதிரி இருக்குமோ, அதற்கு ஏற்ற சான்றிதழை சென்சார் குழு கொடுக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டில் ஜன நாயகன் படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை என்றால் அதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்.

BJP Kushboo Opes About Vijay Jana Nayagan Censor Issue And She Accusing DMK Support Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்: பராசக்தி படத்திற்கும் சென்சார் கிடைக்கவில்லை என்ற பிரச்னை போய்க்கொண்டு உள்ளது. அவர்கள் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளார்கள். விஜய் இடத்தை சிவகார்த்திகேயனை வைத்து நிரப்ப திமுக திட்டமிடுகிறதா என்ற கேள்விக்கு, அதற்கு மக்களுக்கு நல்லது செய்வதில் கவனம் செலுத்தலாம்" என்றும் பதில் அளித்தார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

எதிர்பார்ப்பு: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரத்தில் நடைபெற்றது. டிரைலர் இந்த வாரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. டிரைலரை இதுவரை கிட்டத்தட்ட 37 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்படி இருக்கையில் படத்தை வரும் 9ஆம் தேதி கொண்டாடி வரவேற்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது படத்திற்கு விரைவில் சான்றிதழ் வாங்கி, புக்கிங்கை தொடங்குவார்கள் என்று பெருவாரியான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

BJP Kushboo Opes About Vijay Jana Nayagan Censor Issue And She Accusing DMK Support Sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X