அனுமதி இல்லாமல் என் போட்டோவை பயன்படுத்துவதா..? நடிகை அனுஷ்கா மீது எம்.எல்.ஏ பரபரப்பு புகார்!

By

மும்பை: அனுமதி இல்லாமல் தனது போட்டோவை பயன்படுத்தியதாக நடிகை அனுஷ்கா மீது பாஜக எம்.எல்.ஏ புகார் செய்துள்ளார்.

பிரபல நடிகை அனுஷ்கா சர்மா, பாட்டியாலா ஹவுஸ், பிகே, பாம்பே வெல்வட், சுல்தான், சஞ்சு உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவர், கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சினிமா படங்களையும் தயாரித்து வருகிறார்.

பாதல் லோக்

பாதல் லோக்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், தனது நிறுவனம் மூலம் என்.எச்.10, பிலாரி, பரி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அடுத்து கனேடா, புல்புல் ஆகிய படங்களை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் அவர் பாதல் லோக் (Paatal Lok) என்கிற வெப் தொடரை தயாரித்து உள்ளார்.

அமேசான் பிரைம்

அமேசான் பிரைம்

இதில் அவர் நடிக்கவில்லை. அவினாஷ் அருண் இயக்கும் இந்தத் தொடரில் ஜெய்தீப் அலாவத், குல் பனக், நீரஜ் கபி, ஸ்வஸ்திகா முகர்ஜி, ஐஸ்வக் சிங், அபிஷேக் பானர்ஜி உட்பட பலர் நடித்துள்ளனர். குற்றவியல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அமேசான் பிரைமில் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கூர்கா சமூகம்

கூர்கா சமூகம்

இந்நிலையில், இந்த தொடரின் ஒரு காட்சியில், தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக கூர்கா சமூகத்தினர் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ, நந்தகிஷோர் குர்ஜார் என்பவர் நடிகை அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

அனுமதி பெறாமல்

அனுமதி பெறாமல்

பாதல் லோக் வெப் தொடரில், தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழா காட்சி ஒன்று இடம் பெறுகிறது. அதில் தனது அனுமதி பெறாமல், தனது போட்டோவை பயன்படுத்தி இருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். அந்தக் காட்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்குபெற்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

Virat Kohli allows his wife anushka to cut his Hair | Katrina Kaif into Household Works
பாதுகாப்புச் சட்டம்

பாதுகாப்புச் சட்டம்

இந்த தொடரில், இந்துக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகவும் வகுப்புவாத பரபரப்பை தூண்டும் விதமாக இருப்பதாகவும் இந்தியாவின் இமேஜை கெடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நடிகை அனுஷ்கா சர்மா மீது, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X