இன்பநிதி படத்தையே நாங்க எதிர்க்கல.. ஜனநாயகன் வராததற்கு நாங்க காரணமா?.. எச். ராஜா தடாலடி!

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்தை தணிக்கை வாரியத்தை பயன்படுத்தி பாஜக தான் வரவிடாமல் தடுப்பதாக விஜய் தரப்பினர் சொல்றாங்களே அதற்கு என்ன சொல்றீங்க என்கிற கேள்விக்கு எச். ராஜா தடலாடியாக பதில் அளித்துள்ளார்.

பாஜக தான் காரணம் என விஜய் எங்கேயேவது சொன்னாரா? இல்லையா? அப்போ பாஜக காரணம் இல்லை என கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு பதில் அளித்துள்ளார்.

BJP not behind in Jana Nayagan censor issue and Inbanidhi s Parasakthi too - H Raja
Photo Credit:

மேலும், பராசக்தி படத்தையே எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் வெளியிட்டோம். ஜனநாயகன் படத்துக்கு நாங்க ஏங்க பிரச்னை பண்ணப் போகிறோம் என்றும் ஓபனாக பேசியுள்ளார்.

ஜனநாயகன் வராததற்கு யார் காரணம்?: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றத்தில் வழக்கை கடந்த 20ம் தேதி விசாரித்து முடித்த நிலையிலும், இன்னமும் நீதிபதிகள் தீர்ப்பு தேதியை கூட அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளைக்குள் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தால், குடியரசு தினம் வந்துவிட்டால் அந்த விடுமுறை முடித்து செவ்வாய்க்கிழமை தான் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜனநாயகன் படம் வெளியாகமல் இருக்க பாஜக தான் காரணம் என தவெகவினர் பேசத் தொடங்கிய நிலையில், பாஜகவுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என எச். ராஜா பேசியுள்ளார்.

BJP not behind in Jana Nayagan censor issue and Inbanidhi s Parasakthi too - H Raja
Photo Credit:

இந்தி அரக்கி.. இன்பநிதி படமே வந்துடுச்சு: பொங்கலுக்கு இந்தி அரக்கின்னு இன்பநிதி வெளியிட்ட ஒரு படம் வந்துச்சா? அந்த படத்தையே பாஜக தடை செய்யவில்லை. ஜனநாயகன் படக்குழு ஒழுங்கா சென்சார் போர்டு சொல்வதை கேட்டு வழக்கு தொடராமல் இருந்தால் இந்நேரம் படமே ரிலீஸ் ஆகியிருக்கும். மத்திய அரசு தான் காரணம் என விஜய் சொன்னாரா? அவரே சொல்லாத நிலையில், மற்றவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்றும் தடாலடியாக பேசியுள்ளார்.

கந்தன் மலைக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: தாமரை டிவி யூடியூப் சேனலில் வெளியான எச். ராஜா நடித்த கந்தன் மலை படத்தை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர் என்றும் அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் எச். ராஜா பூரிப்புடன் பேசினார்.

இன்று நல்ல சேதி வருமா?: ஜனநாயகன் படத்துக்கான தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு இன்று வருமா என ஜனநாயகன் படக்குழு காத்திருக்கிறது. அப்படியே வந்தாலும், உச்சநீதிமன்றத்துக்கு மறுபடியும் தணிக்கை குழு செல்லும் என்றும் இந்த பிரச்னை இப்போதைக்கு முடியாது என்றும் ஒருவேளை அனைத்தும் சுமூகமாக முடிந்து விட்டால், பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக சரியான நாள் என்றும் சினிமா நிபுணர்கள் கணித்து வருகின்றனர். அப்படி இல்லை என்றால் தேர்தல் முடிந்த பின்னர் தான் சம்மரில் தான் ஜனநாயகன் வெளியாகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X