twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தை விளம்பரம் செய்யும் பாஜக: காரணம்...

    By Siva
    |

    மும்பை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தை பாஜக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்(The Accidental Prime Minsiter)' என்ற பெயரில் இந்தியில் படமாக்கியுள்ளனர்.

    வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸாக உள்ள இந்த படத்தில் அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்துள்ளார்.

    மன்மோகன் சிங்

    தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையிடத்தால் கைப்பாவையாக பயன்படுத்தப்பட்டுள்ளது போன்று காண்பித்துள்ளனர். பதவியை ராஜினாமா செய்ய விரும்பும் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி தடுத்து நிறுத்துவதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது.

    பாஜக

    மன்மோகன் சிங்கை கட்சி எப்படி பிடித்து வைத்திருந்தது என்று பாருங்கள் என்று கூறி படத்தின் ட்ரெய்லர் லிங்க்கை வெளியிட்டுள்ளது பாஜக.

    விமர்சனம்

    நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மன்மோகன் சிங் பற்றிய படத்திற்கு பாஜக விமர்சனம் என்ற பெயரில் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜக விளம்பரம் செய்தால் படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    ட்ரெய்லர்

    பாஜக இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கடைசியாக எந்த படத்தின் ட்ரெய்லரை விளம்பரம் செய்துள்ளார்கள்?. 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியின் பெயரை கெட்டுக்கவே இந்த படம்.

    English summary
    BJP India official twitter handle is promoting former PM Dr. Manmohan Singh's biopic 'The Accidental Prime Minister'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X