5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி: பாடம் கற்பாரா விஷால்?
Recommended Video

தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா- விஷால்- வீடியோ
சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

பாஜகவின் நிலையை பார்த்து பலரும் மோடி கூறிய நல்ல நாள் வந்துவிட்டது என்று கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றாததே பாஜகவின் தோல்விக்கு காரணம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை விஷால் நிறைவேற்றி வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவின் தோல்வி விஷாலுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டால் பாஜகவின் நிலை தான் அவருக்கும் ஏற்படும்.
Comments


Click it and Unblock the Notifications