Vijay: விஜய் எழுதிக் கொடுத்ததை படித்துக் கொண்டிருக்கிறார்.. விளாசி விட்ட சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

சென்னை: ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் மொத்த தமிழ்நாடும் அதற்கு தயாராகி வருகிறது. மேலும் இம்முறை நான்குமுனை போட்டியாக தேர்தல் களம் இருக்கும் என்று அரசியல் தளத்தில் பேசு பொருளாக உள்ளது. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் ஒன்று. இப்படி இருக்கையில் விஜய்யின் அரசியல் மேடைப் பேச்சுகள் குறித்து நடிகரும் பாஜகவைச் சேர்ந்தவருமான சரத்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் வருவதால் நடிகர் விஜய்யும் தனது கட்சி சார்பாக தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருகிறார். அதில் அவர் பேசுவது தொடர்ந்து கவனத்தை பெற்று வருகிறது. அவரது பேச்சில் தொடர்ந்து திமுக தான் தங்களுக்கு அரசியல் எதிரி என்றும், இந்த தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் போட்டி என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் நடிகரும் பாஜகவைச் சேர்ந்த நடிகருமான சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டியில், " அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவன் நான். விஜய் இதுவரை தனது கொள்கை கோட்பாடுகளை கூறவில்லை. விஜய் ஏதோ உரக்க பேசி கருத்துக்கள் சொல்லுகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் மக்களுக்கு என்ன புதிதாக செய்யப்போகிறார் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு கடனை எப்படி அடைக்கப்போகிறார்? அதற்கு அவரிடத்தில் இருக்கும் திட்டம் என்ன என்று கூறவேண்டும்.

BJP Sarathkumar Slams TVK Vijay Political Speech

அவதூறு பேசி: அவர் முதலில் தனது திட்டங்களை சொல்ல வேண்டும், அதன் பின்னர் அரசியல் பேசட்டும். உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொன்னால், நீங்கள் கருத்துக்களை சிறப்பாக சொன்னால் நன்றாக இருக்கும். தனி மனிதனை மட்டும் அவதூறாக பேசி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் அந்த கட்சி எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

எழுதி கொடுத்ததை: திமுக - தவெகவுக்கு இடையில் தான் போட்டியே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரே என்று கேட்டதற்கு, நான் அதை எல்லாம் பார்ப்பதே இல்லை. அவர் சொல்வதை சொல்லிக்கொண்டே தான் இருப்பார். அவருக்குச் சொல்லத் தெரிந்தது அது மட்டும் தான். எழுதிக் கொடுத்ததை படித்துக் கொண்டு இருக்கிறார்" என்று தெரிவித்தார். சரத்குமாரின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களும் அதற்கு ரியாக்ட் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X