எஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி பார்சேல்.. கதறடிக்கும் பாஜகவினர்!

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி ஒன்று பார்சலில் வந்துள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, பாஜகவை சேர்ந்த சிலர் காவி வேட்டி ஒன்றை பார்சலாக அனுப்பி வைத்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் சட்டம் ஒரு இருட்டறை, டிராபிக் ராமசாமி உள்பட பல படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் காப்பாத்துங்க நாளைய சினிமாவை என்ற விழிப்புணர்வு பட விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை அழிக்க நினைக்கிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பின்னர் அனைவரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலையப் போகிறோம்' என பாஜகவைத் தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் மோடி

மீண்டும் மோடி

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. வரும் 30ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.

காவி வேட்டி பார்சல்

காவி வேட்டி பார்சல்

இந்த சூழ்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டு முகவரிக்கு பாஜகவினர் பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக காவி வேட்டி ஒன்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பாஜக கடிதம்

பாஜக கடிதம்

கூடவே கடிதம் ஒன்றும் பார்சலில் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி என்றும், முதல் தவணையாக காவி வேட்டி அனுப்பியுள்ளோம். இனி ஒவ்வொரு தவணையாக காவி வேட்டி அனுப்பிக் கொண்டே இருப்போம். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் காவி வேட்டியே அணிய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றும் எழுதப்பட்டுள்ளது.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரைக் கண்டித்து பலர் சமூகவலைதளங்களிலும் காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X