நீச்சல் பயிற்சியாளராக மிரட்டும் அண்ணாமலை.. வெளியானது அரபி படத்தின் டீசர்!

சென்னை : தமிழக மாநில தலைவர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ளது அரபி படம்.

இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் சர்வதேச அளவில் பாரா நீச்சலில் சாதனை படைத்த விஷ்வாசின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

கன்னடத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அண்ணாமலை விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என சிறப்பான முகங்களை கொண்டவர் அண்ணாமலை. இவர் முதல்முறையாக கன்னடத்தில் அரபி என்ற படத்தில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் இவர் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். அதற்கேற்ப இவரது கட்டுக்கோப்பான உடல் இவருக்கு உதவியுள்ளது.

விஸ்வாஷின் வாழ்க்கைக் கதை

விஸ்வாஷின் வாழ்க்கைக் கதை

2 கைகளும் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சலில் பல சாதனைகளை செய்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அண்ணாமலை முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அரபி படத்தின் டீசர்

அரபி படத்தின் டீசர்

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கூறியவுடன் கதை பிடித்துப்போய் உடனடியாக அண்ணாமலை ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது காட்சிகள் அனைத்தும் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலைக்கு சிறப்பான என்ட்ரி காணப்படுகிறது.

பாஜக தமிழக தலைவர்

பாஜக தமிழக தலைவர்

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. அப்போது தனது அதிரடியான செயல்பாடுகளால் இவர் பிரபலமாக இருந்துள்ளார். கடந்த 2019ல் தன்னுடைய பணியை ராஜினாமா செய்த இவர், இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனிடையே தற்போது தமிழக பாஜக மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.

ஒரு ரூபாய் சம்பளம்

ஒரு ரூபாய் சம்பளம்

நீச்சல் வீரர் கேஎஸ் விஸ்வாசின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவரும் சூழலில், இந்தப் படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுள்ளார் அண்ணாமலை. தற்போது வெளியாகியுள்ள டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புல்லட்டில் சிறப்பான என்ட்ரி

புல்லட்டில் சிறப்பான என்ட்ரி

இந்த டீசரில் அண்ணாமலையை சிங்கம் என்று கூறுகிறார்கள். தொடர்ந்து அவர் புல்லட்டில் சிறப்பாக என்ட்ரி கொடுக்கிறார். இந்த டீசரில் விஸ்வாசிற்கு அண்ணாமலை பயிற்சி கொடுப்பது போன்ற காட்சிகளும் காணப்படுகின்றன. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X