இது நக்கலா, பாராட்டா..? அமெரிக்க 'ஆக்‌ஷன்' இசை ஆல்பத்தில் எந்திரன், சிங்கம், ஆம்பள காட்சிகள்!

By

சென்னை: அமெரிக்க இசைக்குழு வெளியிட்டுள்ள இசை ஆல்பத்தில் எந்திரன், சிங்கம், ஆம்பள படங்களின் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இசைக் குழு 'Black Eyed Peas'. ஹிப் ஹாப், பாப், ராப் பாடல்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது இந்தக் குழு.

இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களின் இசை ஆல்பத்துக்கு எப்போதும் கிராக்கிதான்.

வில்லியம் ஆதம்ஸ்

இந்த குழுவில், வில்லியம் ஆதம்ஸ் என்கிற வில்.ஐ.அம் (Will.i.am), ஆப்ள்.டி.அப் (Apl.de.ap), தபூ (Taboo) ஆகியோர் இப்போது உள்ளனர். இவர்கள், பிஹைண்ட் த ஃபிரண்ட், பிரிட்ஜிங் த கேப், எலிபங்க், மங்கி பிசினஸ், த எண்ட், த பிகினிங், மாஸ்டர்ஸ் ஆப் டஹ் சன், டிரான்ஸ்லேசன் ஆகிய ஆல்பங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளனர். இந்த ஆல்பங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

புதிய ஆல்பம்

புதிய ஆல்பம்

பலவேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் இப்போது புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆக்‌ஷன் என்று பெயரிடப்பட்டுள்ள இதன் பாடலில், இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் இருந்து சில ஆக்‌ஷன்களை எடுத்து அதை கிராபிக்ஸ் செய்து பயன்படுத்தி உள்ளனர். ஆரம்பத்திலேயே, இது போலியான டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டது. பார்ப்பதை எல்லாம் நம்பவேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

அதாவது எந்திரன் படத்தில் ரஜினியின் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்தபடி நிற்கும் காட்சி, மனித பிரமிடுகள் போல ஒன்றாக இருக்கும் காட்சி ஆகியவற்றைக் கிராபிக்ஸ் செய்து பயன்படுத்தி உள்ளனர். இந்தி, சிங்கம் படத்தில் அஜய் தேவ்கன் ரோட்டில் ரவுடிகளை அடிக்கும் காட்சியையும் ஓடும் காரில் இருந்து ஸ்டைலாக இறங்கி நின்று சுடுவது போலான காட்சியையும் பயன்படுத்தி உள்ளனர்.

போலியான கிராபிக்ஸ்

போலியான கிராபிக்ஸ்

ஆம்பள படத்தில் விஷாலின் ஆக்‌ஷன் காட்சியையும் ராஜமவுலியின் மரியாத ராவணா படத்தில் சைக்கிளில் மிகப்பெரிய பள்ளத்தைத் தாண்டும் காட்சியையும் இதை கிராபிக்ஸ் செய்து பயன்படுத்தி உள்ளனர். இது போலியான கிராபிக்ஸ் என்று குறிப்பிட்டுள்ள அவர்களின் இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றி வில்லியம் ஆதம்ஸ் என்கிற வில்.ஐ.அம் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்திய கலாச்சாரம்

இந்திய கலாச்சாரம்

'இந்த ஆக்‌ஷன் வீடியோவை பாருங்கள். இந்தக் காட்சிகள் பாலிவுட் படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. இந்திய இசையை எப்போதும் விரும்புவோம். ஆஷா போன்ஸ்லேவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் வரை இந்திய இசை எங்கள் பாடல்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்களது எலிபங்க், மங்கி பிசினஸ் ஆல்பங்கள் இந்திய கலாச்சாரத்தின் பாதிப்பில் உருவானவை. உலகத்துக்கான உங்களின் பங்களிப்புக்கு நன்றி இந்தியா. இவ்வாறு கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

இந்த இசை ஆல்பத்தை பாராட்டியுள்ள இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கலைகளின் மூலம் எல்லைகள் மறைகின்றன என்று தெரிவித்துள்ளார். இந்த இசை ஆல்பமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. சிலர், நம்ம சினிமாவை கிண்டலடிக்கிறாங்களா, பாராட்டுறாங்களா? என்று கேட்டுள்ளனர். சில ரஜினி ரசிகர்கள், என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க? என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X