கருப்பு தான் அழகு.. நிஷாவுக்கு சப்போர்ட் பண்ண வனிதா விஜயகுமார்.. என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: அறந்தாங்கி நிஷாவை பார்த்தால் தனது அம்மா ஞாபகம் வருது, அவங்களும் கருப்பாத்தான் இருப்பாங்க என அனிதா சம்பத் அழுத நிலையில், கடைசியாக தன்னைப் பற்றி பேசும் போது, நிஷாவும் கருப்பா இருக்கேன்னு எல்லாரும் தன்னை கிண்டல் பண்ணுவார்கள் என்றார்.

Recommended Video

கண்ணீர்விட்ட Anitha Sampath | Emotional moment | Promo 1

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு தான் அழகு என அறந்தாங்கி நிஷாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

கடந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார், இந்த சீசனை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

போன சீசன்

போன சீசன்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியையே வேற லெவலுக்கு கொண்டு சென்றார். ஒவ்வொரு போட்டியாளர்களுடன் சண்டை போடும் அவருக்கு வத்திக்குச்சி வனிதா என்றே பெயர் வைத்தனர். இந்த பிக் பாஸ் சீசனுக்கும் வனிதா வரவேண்டும் என்கிற கோரிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தன.

ஆம்பள வனிதா

ஆம்பள வனிதா

இந்த சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே சண்டையை ஸ்டார்ட் பண்ணியுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி தான் ஆம்பள வனிதா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷிவானி நாராயணன், அனிதா சம்பத் உள்ளிட்டோருடன் அவர் தொடர்ந்து சண்டை செய்து வருவதாலே இப்படி அவருக்கு பட்டம் கொடுத்துள்ளனர்.

கருப்பா இருக்கேன்னு

கருப்பா இருக்கேன்னு

அறந்தாங்கி நிஷாவுக்கு ஹார்ட் கொடுக்கும் போது, அனிதா சம்பத், எங்க அம்மாவும் கருப்புத்தான். அதன் காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டார். விலை உயர்ந்த நகைகளை போட்டுக் கொள்ள மாட்டார் என அனிதா கண் கலங்க அவரை அரவணைத்த நிஷா, இறுதியில் தன்னைப் பற்றி பேசும் போது, கருப்பா இருக்கேன்னு மத்தவங்க கிண்டல் பண்ணும் போது தான் எனக்கே தெரிஞ்சது என்று உருக்கமாக பேசினார்.

அவமானபட்டவன் தான்

அவமானபட்டவன் தான்

மேலும், இந்த உலகத்துல அழகா இருக்கவன் சாதிக்கிறதை விட, அவமானப்பட்டவன் தான் அதிகமா சாதிச்சு இருக்கான். நான் அதிகமா அவமானப்பட்டு இருக்கேன் நான் சாதிச்சிக்கிட்டே இருப்பேன்.. யாரும் எந்த இடத்துலயும் துவண்டு போயிடாதீங்க என நிஷா கூறியதை கேட்ட பலரும், அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

கருப்பு தான் அழகு

கருப்பு தான் அழகு

நடிகை வனிதா விஜயகுமார் உடனடியாக, கருப்பு தான் அழகு, பெண்களை பாடி ஷேமிங் பண்ணுவதை தயவு செய்து நிறுத்துங்க, கருப்பா இருக்கா, குள்ளமா இருக்கா, குண்டா இருக்கான்னு அவளை அசிங்கப்படுத்தாதீங்க, அழகு என்பது தோற்றத்தில் இல்லை. அதையும் தாண்டிய அழகான மனசுல இருக்கு என வனிதா ட்வீட் போட்டுள்ளார்.

வெள்ளையா இருக்கிறவங்க

வெள்ளையா இருக்கிறவங்க

"Black is beautiful " என்று வெள்ளையா இருக்கிறவர்கள் தான் சொல்லுவார்கள். கருப்பா இருக்கிறவர்கள் யாரும் சொன்னது இல்லை என அறந்தாங்கி நிஷா பேசிய வசனத்தை வைத்தே வனிதா விஜயகுமாரை சில நெட்டிசன்கள் ஓட்டி வருகின்றனர். உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி அக்கா என வனிதா ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X