Black Mail: ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில்.. டிரைலரை வெளியிட்ட தனுஷ்!
சென்னை: ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜெயக்கொடி அமல்ராஜ் வழங்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' படங்களின் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் மட்டும் நான் திரைப்படங்கள் வெளியானது. ஜிவி பிரகாஷின் 25வது படமான கிங்ஸ்டன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ், பிளாக் மெயில் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பிளாக் மெயில்: நடிகர் அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மாறன் பிளாக் படத்தை இயக்கி உள்ளார். ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் ஆகஸ்ட் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதில், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் நல்லா வந்து இருக்கு: இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து இருக்கிறார். இத்திரைப்படம் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் என்றார். இதைத்தொடர்ந்து பேசி ஜிவி பிரகாஷ், பிளாக் மெயில் திரைப்படத்தின் கதையை மாறன் அவர்கள் எனக்கு ஒன் லைனாகத்தான் சொன்னார். கதையை கேட்டதுமே எனக்கு பிடித்து விட்டது. உடனே ஓகே சொல்லிவிட்டேன். திறமையான இயக்குனர்களின் வரிசையில் மாறன் அவர்களின் பெயர் நிச்சயம் இருக்கும். பிளாக் மெயில் படத்தின் கதை ஆரம்பித்து, அடுத்தடுத்து கனெக்ட்டாகி எத்தனை பேர் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார். படத்தைப் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அண்மை காலமாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. லெவன், டூரிஸ்ட் பேமிலி, போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றன. அந்த திரைப்படங்களின் வரிசையில் பிளாக் மெயில் திரைப்படமும் நிச்சயம் இருக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.
டிரைலர் எப்படி இருக்கு: இதைத்தொடர்ந்து பிளாக் மெயில் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். அந்த டிரைலரில், ஜிவி பிரகாஷின் குரலில் இந்த சமூகம் நமக்கு என்ன கற்று கொடுத்துக்கொண்டு இருக்கு தெரியுமா...யாரையும் நம்பதே என்று தொடங்குகிறது. அடுத்தடுத்து பதற்றம், கடத்துவது, துரத்துவது என பிளாக் மெயில் என்கிற பெயருக்கு ஏற்றபடியே செல்கிறது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. மாறனின் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











