ப்ளாக் பாண்டிக்கு திருமணம்... எம்பிஏ பட்டதாரியை மணக்கிறார். !
சென்னை: பிரபல காமெடி நடிகர் ப்ளாக் பாண்டிக்கு டிசம்பர் முதல் தேதியில் திருமணம் நடக்கிறது. எம்பிஏ படித்த உமேஸ்வரி பத்மினி என்ற பெண்ணை மணக்கிறார் பாண்டி.
கனாக்கானும் காலங்கள் தொடரில் பிரபலமாகி, பின்னர் திரைப்படங்களிலும் பிஸியானவர் ப்ளாக் பாண்டி. கில்லி, ஆட்டோகிராப், அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், நீர்பறவை, மாசாணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

காதல் திருமணம்
தற்போது 10-க்கும் மேற்பட்ட புதுப்படங்களில் நடித்து வருகிறார். பிளாக் பாண்டிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண் பெயர் உமேஸ்வரி பத்மினி. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் திருமணம் டிசம்பர் 1-ந்தேதி சென்னை நூறடி சாலையில் உள்ள ஐஸ்வர்யா மஹாலில் நடக்கிறது. இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகையாக வந்து காதலியானார்
இதுகுறித்து ப்ளாக் பாண்டி கூறுகையில், "டி.வி.யில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தபோது ஒரு ரசிகையாக உமேஸ்வரி பத்மினி எனக்கு அறிமுகமானார். நட்பாக பழகினோம். பிறகு காதலிக்க ஆரம்பித்தோம்.

பெற்றோர் சம்மதம்
ஏழு ஆண்டுகளாககாதலிக்கிறோம். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தோம். இப்போதுதான் அவர்கள் சம்மதம் கிடைத்துள்ளது. திருமணம் செய்து கொள்ள போகிறோம்.

பபூன் சொக்கலிங்கம்
எங்கள் குடும்பமே பரம்பரை நடிகர்கள்தான். என் தாத்தா காமெடி நடிகர் பபூன் சொக்கலிங்கம் ஆவார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம், தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோருடன் பழகியுள்ளார். என் தந்தை எம்.சி.சேகர் தமிழக அரசின் நாடக பிரிவில் நடிகராக பணியாற்றியுள்ளார்.

எஸ்டாட் ஸ்டுடியோ
நான் ஏற்கனவே குறும் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தற்போது எஸ்டாட் என்ற பெயரில் ஸ்டூடியோ துவங்கியுள்ளேன். விரைவில் படங்களுக்கு இசையமைப்பேன். படம் இயக்கவும் செய்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











