ராபர்ட் மாஸ்டர் வேட்டிக்கு கீழே.. படுத்துக்கிட்டு பிளாக் பாண்டி பார்த்த வேலை.. டைட்டில் தான் அல்டிமேட்!

சென்னை: வனிதா விஜயகுமார் உடன் இணைந்து ராபர்ட் மாஸ்டர் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தியேட்டரில் பெரிதாக ஓடாத நிலையில், ஓடிடி நிறுவனங்களும் வாங்க முன் வராத நிலையில், யூடியூபில் அமீர்கான் போல காசுக்கு பார்க்கும் ஆப்ஷனில் ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்தார். ஆனால், அங்கேயும் காசு கொடுத்து பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லாத நிலையில், இலவசமாக வெளியிட்டார்.

உடனே மில்லியன் கணக்கில் ரசிகர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு பயங்கரமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். வனிதா மகள் ஜோவிகா தயாரிப்பாளராக அறிமுகமான படம் தோல்வியை தழுவிய நிலையில், ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.

Black Pandi shares few funny poster of his new movie with Robert Master
Photo Credit:

இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் பிளாக் பாண்டி காமெடியனாக நடித்து வருகிறார். அவர் வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் அலப்பறை போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

பிட்டு படங்களாக நடிக்கும் பிக் பாஸ் பிரபலங்கள்: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி நடித்த ஃபயர் திரைப்படமே பிட்டு பட ரேஞ்சுக்குத்தான் இருந்தது என பலரும் கழுவி ஊற்றினர். வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தையும் அதே வகையில் தான் ரசிகர்கள் தரம் பிரித்தனர். இந்நிலையில், "மைனா குஞ்சு காணோம்" என்கிற டைட்டிலில் அடுத்ததாக ராபர்ட் மாஸ்டர் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மைனா குஞ்சு காணோம்: விவேக் காமெடியான மைனர் கு*சை சுட்டுட்டேன் என்பதை மையமாக வைத்து மைனா குஞ்சு காணோம் என்கிற டைட்டிலில் ஒரு படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆனால், பிளாக் பாண்டி தனது போஸ்ட்டில் மைனர் கு*சு காணோம் என்றே பதிவிட்டு படக்குழுவின் ஐடியாவை பக்காவாக போட்டு உடைத்துவிட்டார்.

வேட்டிக்கு கீழே: மேலும், ராபர்ட் மாஸ்டர் தொடை தெரிய வேட்டியை தூக்கிக் கொண்டு இருக்க, அவரது கால்களுக்கு கீழே படுத்துக் கொண்டு ஒண்ணும் இல்லை என்பது போல பிளாக் பாண்டி கையை காட்டுவதை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். அங்காடித் தெரு படத்தில் சிறப்பாக நடித்த பிளாக் பாண்டிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத நிலையில், இப்படியெல்லாம் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறாரே என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X