Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹர்பஜன் வராததால்… பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ வெளியிட்டார் சேரன்
சென்னை: ஹர்பஜன் சிங் வராததால் பிளாக் சீப்பின் அடுத்த 6ஐ, அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் சேரன். பிளாக் சீப் அடுத்ததாக ஒரு இணைய தொடரை தயாரிக்க உள்ளதாகவும், அந்த இணைய தொடரில் திருவள்ளுவராக ஹர்பஜன் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பிளாக் சீப் யூடியூப் பக்கத்தின் அடுத்த 6யை அறிவிக்க ஹர்பஜன் சிங் வருகிறார் என்று கடந்த சில வாரங்களாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இந்த அறிவிப்பு, சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடக்கும் என்றும் அந்த குழு விளம்பரப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று ஹர்பஜன் சிங்கை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஃபோரம் மாலில் குவிந்து விட்டனர்கள். ஆனால், பாதுகாப்பு காரணங்களாக அவர் வர வில்லை என்றும், அவரின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் விழா மேடையில் தெரிவித்தார் .

இதையடுத்து இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த இயக்குனர் சேரன் பிளாக் சீப்பின் அறிவிப்பை வெளியிட்டார் . மேலும் பிளாக் சீப் அடுத்ததாக ஒரு இணைய தொடரை தயாரிக்க உள்ளதாகவும், அந்த இணைய தொடரில் திருவள்ளுவராக ஹர்பஜன் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிவித்து, ஹர்பஜன் திருவள்ளுவர் வேடம் போட்ட புகைப்படங்கள் அனைவருக்கும் காட்டப்பட்டது. அப்போது, காணொளி காட்சி மூலம் பேசி ஹர்பஜன் சிங்க வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தார்.

பிளாக் சீப் குழு பிளாக் சீப் ஆப்பை அறிமுகம் செய்து, ஆப் பற்றிய விவரங்களை விழாமேடையில் தெரிவித்தனர். மேலும் நீயா நானா கோபிநாத் விழாவில் கலந்து கொண்டு எஃப் 3 எனும் ஃபேசஸ் ஆப் ஃபூயசர் நிகழ்வை லாஞ்ச் செய்தார் . மற்றும் காவல் உயர் அதிகாரி காவலன் ஆப் பற்றி பேசி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் .

மேலும் ஒரு பெரிய சர்ப்ரைசாக பிளாக் சீப் குழு ராக்போர்ட் எண்டர்டெயினிமன்டுன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாகவும், இதில் ஜயாஸ் மற்றும் மைக் செட் ஶ்ரீராம் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்றும் தெரிவிக்கபட்டது .
கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுவிட்டு கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி.. நெகிழ்ச்சி சம்பவம்!
ஆஸார் மற்றும் ரியோவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விழாமேடையில் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ,சுட்டி அரவிந்த் மற்றும் புட்சட்னி ராஜ்மோகன் ஆகியோர் பிளாக் சீப் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.