Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கர்ப்பமான மார்வெல் நடிகை.. கன்ஃபார்ம் பண்ண கணவர்.. ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு குவியுது வாழ்த்து!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் படங்களில் பிளாக் விடோ அவெஞ்சராக கலக்கி வரும் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில மாதங்களாகவே ஸ்கார்லெட் ஜோஹன்சன் கர்ப்பமாக இருக்கிறார் என வதந்திகள் கிளம்பி வந்த நிலையில், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
ஓடிடியில்
ரிலீஸ்
ஆகும்
டிக்கிலோனா..
வெளியானது
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு..
எப்போன்னு
பாருங்க!
இந்நிலையில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனின் கணவரே அதிகாரப்பூர்வமாக அதனை அறிவித்துள்ளார்.

பிளாக் விடோ
மார்வல் படங்களான அவெஞ்சர்ஸில் நடாஷா (அ) பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் ஸ்கார்லெட் ஜோஹன்சன். கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி இந்தியாவை தவிர்த்து உலக நாடுகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சனின் சோலோ அவெஞ்சர் படமான பிளாக் விடோ ரிலீசாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

நிர்வாணக் காட்சிகள்
ஹாலிவுட் நடிகைகள் என்றாலே சர்வ சாதாரணமாக நிர்வாணக் காட்சிகளில் நடித்து விடுவார்கள். ஆனால், நிர்வாணக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என ஒரு முடிவாகவே எடுத்து தொடர்ந்து தனது நடிப்பால் முன்னணி நடிகையாக ஹாலிவுட்டில் கலக்கி வருகிறார் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.

வெடித்த சர்ச்சை
மார்வெல் படங்களிலேயே அயன்மேன் 2ம் பாகத்தில் தான் தன்னை மிகவும் செக்ஸியாக காட்டினார்கள் என்றும் தனக்கு அது பிடிக்கவில்லை என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை சமீபத்தில் வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.

புரமோஷன்களில் பங்கேற்கவில்லை
தனது நடிப்பில் வெளியான பிளாக் விடோ படத்தின் புரமோஷன்களுக்கு நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் செல்வதை தவிர்த்து வந்தார். மார்வெல் மீது உள்ள கோபம் காரணமாக அவர் தவிர்த்து வருகிறாரா? என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற வதந்திகளும் வலம் வந்தன.

அமைதியோ அமைதி
ஆனால், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்போ அல்லது மறுப்போ வெளியாகவில்லை. வழக்கத்திற்கு மாறாக தன்னை சுற்றி வைரலாக வலம் வரும் வதந்திகளை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

கன்ஃபார்ம் பண்ண கணவர்
ஆனால், எத்தனை நாளைக்குத் தான் உண்மையை மூடி மறைக்க முடியும். நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை அவரது இரண்டாவது கணவரும் பிரபல காமெடி நடிகருமான காலின் ஜோஸ்ட் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

அப்பா ஆகப்போகிறேன்
சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் காலின் ஜாஸ்ட் கலந்து கொண்ட காமெடி நிகழ்ச்சியில் விரைவில் தான் அப்பா ஆகப் போகிறேன். இந்த உணர்வு எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது என அறிவித்ததை கேட்ட ரசிகர்கள் அதனை வலைதளங்களில் பதிவிட உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

போன வருஷம் தான்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் காமெடி நடிகர் காலின் ஜோஸ்ட்டை நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

6 வயசு மகள்
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் ரோமைன் டுரியாக் என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு 6 வயதில் அழகான மகள் உள்ளார். இந்நிலையில், இரண்டாவது கணவரை திருமணம் செய்து கொண்டு உடனடியாக கர்ப்பமாகி உள்ளார் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
அயலி வெப்சீரிஸில் இடம்பெற்ற டீட்டெய்லான மாதவிடாய் காட்சிகள்.. இந்த அளவுக்கு வீரியம் அவசியம் தானா?
-
தளபதி 67ல் கமிட்டான சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?... அதிர்ச்சியில் கோலிவுட் நடிகர்கள்!