சாரி திரிஷா.. பிளாக்கி ஸ்டார் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல.. என்னங்க ட்ரெஸ் இது.. எல்லை மீறுகிறாரே!
சென்னை: யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் வீடியோக்கள் போட்டும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ரிலீஸ் பதிவிட்டும் பிரபலமானவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிளாக்கி ஸ்டார். சமூக வலைதளங்களில் பிரபலமான அவர்; ஜீ தமிழில் ஒளிபரப்பான சிங்கிள் பசங்க நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்நிகழ்ச்சியில் அவரால் டைட்டில் அடிக்க முடியவில்லை.
சோஷியல் மீடியாக்களில் போடப்படும் போஸ்ட் ஒருகாலத்தில் வருமானம் எதுவும் கொடுக்காமல் இருந்தது. ஆனால் நாளடைவில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் போஸ்ட்டுகள் போட்டு சம்பாதிப்பவர்கள் அதிகரித்தார்கள். உலகம் முழுவதும் இந்த நடைமுறை அதிகரித்ததால் தமிழ்நாட்டிலும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் வளர்ந்தார்கள். அதன் மூலம் பணம் மட்டுமின்றி புகழ், பிரபல்யம் என அத்தனையையும் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள் அவர்கள்.
பிளாக்கி ஸ்டார்: அவர்களில் ஒருவர்தான் பிளாக்கி ஸ்டார். சுரேஷ் குமார் எனும் இயற்பெயரை கொண்ட அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். நன்றாக படித்திருக்கும் அவருக்கு பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை பிறக்க; 90களில் வெளியான பல பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டுவந்தார். அது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் வைரலாக ஆரம்பித்தன. காலப்போக்கில் அதையே முழு நேர தொழிலாக செய்ய ஆரம்பித்தார்.

எழுந்த விமர்சனங்கள்; பிளாக்கி ஸ்டாரின் பதிலடி: அவரது வீடியோக்கள் பலரிடம் வரவேற்பை பெற்றது போல; பலரிடம் விமர்சனத்தையும் சந்தித்தது. அவர் பிரபல்யத்துக்காக நல்ல நல்ல பாடல்களை எல்லாம் மோசம் செய்கிறார் என்று கூறினார்கள். மேலும் பிரபலமாவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாரா என்றும் கேள்வியை முன்வைத்தார்கள். ஆனால் அவரோ தனியார் சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில், 'நான் கல்வி தொடர்பான பயனுள்ள வீடியோக்கள் நிறைய போட்டிருக்கிறேன். அதை இங்கே எத்தனை பேர் பார்த்தார்கள்' என கேள்வி கேட்டு பதிலடியை கொடுத்தார்.
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில்: அவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது சிங்கிளாக இருக்கும் அவர்; ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தன்னால் முடிந்த அளவுக்கு டஃப் கொடுத்தார். ஆனால் கூமாபட்டி தங்கபாண்டி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலை அடித்தார். அடுத்த இடத்தை ராகவேந்திரா பெற்றார். பிளாக்கி ஸ்டாரால் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும்; அவருக்கு தேவையான பிரபல்யம் கிடைத்துவிட்டதாகவே சொல்ல வேண்டும்.
சாரி திரிஷா: அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து தனது வாழ்க்கை பற்றி பேசிவருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் புதிய வீடியோ பலருக்கும் ஷாக்கை கொடுத்திருக்கிறது. அதாவது லேசா லேசா படத்தில் இடம்பெற்ற 'லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா' பாடலுக்கு நடனமாடி வீடியோ போட்டிருக்கிறார். இதில் பலரும் ஷாக் ஆக காரணம் என்னவென்றால்; அவர் அணிந்திருக்கும் காஸ்ட்யூம்தான்.
என்ன காஸ்ட்யூம்?: அதாவது துணியாலான உடையை அணியாமல், கட் அவுட் போஸ்டரை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு அந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி வீடியோவோடு, 'சாரி திரிஷா.. புத்தாண்டு ஸ்பெஷல்' என்றும் கேப்ஷன் போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, என்னங்க காஸ்ட்யூம் இது. எல்லை மீறி பிளாக்கி ஸ்டார் போறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அதை வைரலாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











