Blast Day 2 Box Office - பிளாஸ்ட் 2வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸே பிளாஸ்ட்தான் ப்பா!

சென்னை: சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படமானது சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற பிளாஸ்ட்; பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் பிளாஸ்ட்டாகவே இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுபாஷ் கே. ராஜ். அவர் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரை லீடு ரோலாக வைத்து பிளாஸ்ட் படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஜென் ஸி தலைமுறையின் ஃபேவரைட்டாக திகழ்பவர் பிரதீப். அவரிடம் வேலையை கற்றுக்கொண்டு படம் இயக்க வந்திருப்பதால்; சுபாஷ் மீது ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு அதீத நம்பிக்கையும் இருந்தது. அதன் காரணமாக அவர் கேட்ட விஷயங்கள் அனைத்தையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுத்தது.

Blast Box Office Day 2 Arjun Starrer Sees Impressive Growth in Collections
Photo Credit:

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தரம்: அதேபோல் ஏஜிஎஸ், சுபாஷ் மீது நம்பிக்கை வைத்து அர்ஜுனும் இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார். சாதாரணமாகவே சண்டை காட்சிகளில் அர்ஜுனை கையில் பிடிக்க முடியாது. இந்தப் படத்தின் மைய சரடே அதை வைத்துதான். மேலும் கராத்தே மாஸ்டர் ரோல் வேறு. கரும்பு தின்ன கூலியா என்பது போல் இப்படத்துக்குள் வந்தார். சுபாஷும் அர்ஜுனுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் படத்தில் வைத்து அவரையும், அவரது ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.

Also Read
பெரியாரை பேசினால் அவ்வளவுதான்.. போகிறபோக்கில் தட்டிய சிவக்குமார்.. தரமான பதிலடி கொடுத்த சத்யராஜ்
பெரியாரை பேசினால் அவ்வளவுதான்.. போகிறபோக்கில் தட்டிய சிவக்குமார்.. தரமான பதிலடி கொடுத்த சத்யராஜ்

ஹீரோயின்களும் தரம்: அதுமட்டுமின்றி அபிராமி, ப்ரீத்தி முகுந்தனுக்கும் சூப்பரான சண்டை காட்சிகளை வைத்து அதகளம் செய்துவிட்டார் இயக்குநர். வெறும் சண்டை காட்சிகளில் மட்டும் கவனத்தை செலுத்தி கதை, திரைக்கதையில் கோட்டை விடும் இயக்குநர்கள் மத்தியில்; சுபாஷோ அந்த ஏரியாக்களிலும் தனது பலத்தை நிரூபித்திருக்கிறார். இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு பார்க்கும்படியாக பிளாஸ்ட் அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்: பலரும் படத்தை பார்த்து பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தார்கள். அதிலும், குடும்பங்கள் பார்க்க வேண்டிய படமாக மட்டுமில்லாமல்; பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் அவர் பிளாஸ்ட்டை எடுத்திருப்பதுதான் ஹைலைட்டே; கண்டிப்பாக இந்த இயக்குநருக்கு அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும், பெரிய வெற்றிகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கை திரைத்துறையினரிடம் வெளிப்படுகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் படம் சக்கைப்போடு போடுகிறதாம்.

வசூல் நிலவரம்: பாக்ஸ் ஆஃபிஸ் விவரங்களை வெளியிடும் Sacnilk இணையதளம் பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, முதல் நாளில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்த அப்படம்; இரண்டாவது நாளான நேற்று ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். முதல் நாளைவிட நேற்று படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது. மொத்தம் இரண்டு நாட்களில் அந்தப் படம் மூன்று கோடியே 20 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. படத்துக்கு வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக கூட்டமும் அதிகரிப்பதால் இனிவரும் நாட்களிலும் வசூல் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: blast arjun அர்ஜுன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X