Blast Day 4 Box Office - பிளாஸ்ட் 4வது நாள் வசூல் எவ்வளவு?.. பாக்ஸ் ஆஃபிஸ் நம்பர் செம வேகத்தில் ஏறுது

சென்னை: சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் பிளாஸ்ட். இதில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஓரளவுக்கு எதிர்பார்ப்போடு வெளியான படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. சூழல் இப்படி இருக்க நான்காவது நாளான நேற்றைய வசூலும் படக்குழுவுக்கும் பெரிய மகிழ்ச்சியையே கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் புதிய புதிய இயக்குநர்கள் வர தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வருடத்தில் அறிமுகமான கீர்த்திஸ்வரனில் தொடங்கி அவர்கள் அனைவருமே தங்களது முதல் படத்தை தரமாகத்தான் கொடுத்துவருகிறார்கள். அந்த லிஸ்ட்டில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் சுபாஷ் கே. ராஜ். இவர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக வேலைகளை கற்றுக்கொண்டவர். பிஆரிடம் முழு வித்தைகளையும் கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவை கலக்குவதற்கு வந்திருக்கிறார்.

Blast Box Office Day 4 Arjun s Action Thriller Sees Huge Jump Crosses Rs 16 Crore in India
Photo Credit:

பிளாஸ்ட் இயக்குநர்: அதன்படி முதல் படமாக பிளாஸ்ட்டை இயக்கியிருக்கிறார். இதில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு என்றாலே கண்டிப்பாக என்ட்டெர்டெயின்மென்ட்டுக்கு மினிமம் கியாரண்டி என்ற நிலைமைதான் நிலவுகிறது. அது இந்தப் படத்திலும் மீண்டும் உறுதியாகியிருக்கிறது. இயக்குநர் சுபாஷ் தனது கதையிலும், திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் பிளாஸ்ட் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Also Read
தமிழ்நாட்டையே அதிர வைத்த திரிஷ்யம் 3.. 10-வது நாளில் மோகன்லால் படைத்த பிரம்மாண்ட சாதனை!
தமிழ்நாட்டையே அதிர வைத்த திரிஷ்யம் 3.. 10-வது நாளில் மோகன்லால் படைத்த பிரம்மாண்ட சாதனை!

பட்டையை கிளப்பும் சண்டை காட்சிகள்: படத்தின் ஹைலைட்டாக இருப்பது சண்டை காட்சிகள்தான். அர்ஜுன் ஏற்கனவே ஆக்ஷன் கிங் பட்டத்தை தன்னிடம் வைத்திருப்பவர். அவர் சண்டை காட்சியில் இப்படி ஃபுல் மீல்ஸ் சாப்பாடு பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அந்த அளவுக்கு சண்டை காட்சிகள் தரமாக இருக்கின்றன. அதேபோல் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் பாரபட்சம் இல்லாமல் சண்டை காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களும் தரமான ஆக்ஷன் ஹீரோயின்களாக ஜொலித்திருக்கிறார்கள்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: இந்தப் படம் வெறும் சண்டை காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கவில்லை. கதை ரீதியாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். எனவே குடும்பத்தினர் அனைவருமே தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து ரசித்துவருகிறார்கள். சுபாஷ் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. நிச்சயம் அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. விமர்சனத்தில் மட்டுமின்றி வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது.

வசூல் நிலவரம்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி நான்காவது நாளான நேற்று பிளாஸ்ட் ஆறு கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். மூன்றாவது நாளில் அந்தப் படம் 4.55 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ட் செய்திருக்கிறது. நாளுக்கு நாள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரிப்பதால் ரசிகர் கூட்டமும் படையெடுத்து சென்று வசூல் மழையை பொழிந்துவருகிறது. படம் ரிலீஸாகி நேற்றோடு நான்கு நாட்கள் முடிவடைகிறது. அந்தப் படம் மொத்தம் இதுவரை இந்தியாவில் மட்டும் 16 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறதாம்.

Read more about: blast அர்ஜுன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X