பிளாஸ்ட் பெற்ற பெரிய வெற்றி.. இயக்குநரின் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல.. என்ன சொன்னாங்க பாருங்க

சென்னை: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் இயக்கத்தில் சுபாஷ் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் பிளாஸ்ட். படத்துக்கு இதுவரை சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது. இந்நிலையில் பிளாஸ்ட் இயக்குநர் சுபாஷின் அம்மாவும், பெரியம்மாவும் சந்தோஷ மிகுதியில் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கோலிவுட்டில் ஜென் ஸி தலைமுறையின் ஃபேவரைட்டாக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இதுவரை இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட். அவர் நடித்த படங்களில் எல்ஐகே தவிர்த்து மற்ற படங்கள் மெகா ஹிட். அவரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் சுபாஷ் கே. ராஜ். அசிஸ்டென்ட் டைரக்டராக வேலைகளை கற்றுக்கொண்டு அர்ஜுன், அபிராமி, ப்ரித்தி முகுந்தன் உள்ளிட்டோரை வைத்து பிளாஸ்ட் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Blast Director Subash s Mother Gets Emotional After Film Success Says Women Are Powerful Too
Photo Credit:

படம் சூப்பர் ஹிட்: படம் பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். அதிலும் ஆக்ஷன் சீன்கள் எல்லாம் பட்டையை கிளப்புவதாகவும்; கண்டிப்பாக இந்த இயக்குநருக்கு எதிர்காலத்தில் இன்னும் பெரிய இடங்கள் எல்லாம் காத்திருக்கின்றன என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. மேலும் இதனை வெறும் சண்டை படமாக மட்டும் எடுக்காமல் பெண்களுக்கு தேவையான படமாகவும் எடுத்திருப்பது அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது. பெரும்பாலான படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறனே கூட இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தைதான் கொடுத்திருக்கிறார்.

Also Read
சங்கீதாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டோம்.. அவங்களுக்கு என்ன சொல்றதுனு தெரியல.. விஜய் அம்மா ஓபன்
சங்கீதாவிடம் நேரடியாகவே கேட்டுவிட்டோம்.. அவங்களுக்கு என்ன சொல்றதுனு தெரியல.. விஜய் அம்மா ஓபன்

வசூல் வேட்டை: விமர்சன ரீதியாக படம் சூப்பர் வரவேற்பை பெற்றது போல் வசூலிலும் நல்ல நிலையிலேயே இருக்கிறதாம். பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்த தகவல்படி முதல் நாளான நேற்று மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் டாக்குகளே வருகின்றன. குடும்பத்தோடும் பார்க்கலாம் என்பதால் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேற்கொண்டு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுபாஷின் அம்மா பேட்டி: இந்நிலையில் இயக்குநர் சுபாஷின் அம்மா படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பெண்கள் அடித்தாலும் வலிக்கும். இயக்குநர் சுபாஷ் ராஜ் தெறிக்கவிட்டுட்டான். பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்தானே என்று நினைக்க வேண்டாம். நாங்களும் ரக்கடாக இருப்போம். பையன் ரொம்ப நல்லா இருக்க வேண்டும். நானும் டெய்லர்தான். கராத்தே ஸ்டூடண்ட்டும் கூட. குடும்பத்தோடு எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். ரொம்ப பெருமையாக இருக்கிறது" என்றார்.

பெரியம்மா சொன்னது: அவரைத் தொடர்ந்து சுபாஷின் பெரியம்மா பேசுகையில், "இந்தப் படம் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் உதாரணம்" என்றார். தங்கள் வீட்டு பிள்ளை பெற்ற வெற்றியை சந்தோஷத்துடன் பொதுவெளியில் பகிர்ந்துகொண்ட சுபாஷின் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

Read more about: blast subash சுபாஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X