Blast First Day Box Office: அர்ஜூனின் பிளாஸ்ட் படம் வசூலில் பிளாஸ்டானதா? முதல் நாள் வசூல் விவரம்!

சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் இயக்கியுள்ள படம் ப்ளாஸ்ட். ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் , அபிராமி. ப்ரித்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூலை பார்க்கலாம்.

பிளாஸ்ட்: கராத்தே மாஸ்டரான அர்ஜூன் தனது மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதில் இருந்தே கராத்தே பயிற்சி கற்று கொடுத்து ஒரு தைரியமான ஒரு பெண்ணாக வளர்க்கிறார். அர்ஜூனின் மனைவியான அபிராமியும் கராத்தே தெரிந்தவராகவே இருக்கிறார். தனது அப்பாவின் அறிவுரையாலும், தனக்கு தெரிந்த தற்காப்புகலையாலும் ப்ரீத்தி அனைவருக்கும் உதவி செய்து, தைரியமாக தவறுகளை தட்டிக்கேட்கிறார்.

Arjun Blast Box Office
Photo Credit:

படத்தின் கதை: மறுபக்கம் பெரும் முதலாளியான ஜான் கொக்கென் ஒரு மலையை குடைந்து 7000 கோடி மதிப்புள்ள அரிய வகை கனிமத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார். இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க அமைச்சருக்கு 1000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இந்த பணத்தை கைமாற்றும் அர்ஜூன் சிதம்பரம் எதிர்பாராத விதமாக போலீஸில் சிக்கிவிடுகிறார். இதனால், அர்ஜூனின் குடும்பம் இந்த பிரச்சனைக்குள் எப்படி சிக்குகிறது. இதில் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான்.. பிளாஸ்ட் திரைப்படத்தின் மீதி கதை.

முதல் நாள் வசூல்: நேற்று வெளியான இப்படத்திற்கு தமிழ்நாட்டில் நல்ல அளவில் திரையிடல் கிடைத்துள்ளது. மொத்தமாக 1,022 காட்சிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.1 கோடி நிகர வசூலை இப்படம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் ரூ.10 லட்சம், கேரளாவில் ரூ.7 லட்சம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.1 லட்சம் வசூலாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் 'ப்ளாஸ்ட்' திரைப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் ரூ.1.15 கோடியாக பதிவாகியுள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் திரை இருப்பு, குடும்ப எமோஷன், சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் மற்றும் அதிரடி காட்சிகள் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்று வருகின்றன. வார இறுதி நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X