Blast Public Review: பிளாஸ்ட் பப்ளிக் விமர்சனம்.. தரமான ஆக்‌ஷன் படம்.. கலக்கிட்டாங்கப்பா.. குவியும் பாராட்டு

சென்னை: AGS நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுபாஷ் கே ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள படம் பிளாஸ்ட். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, பவன், ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு பீனிக்ஸ் பிரபு ஸ்டண்ட் அமைத்துள்ளார். டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், படம் எப்படி இருந்தது என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம்.

ரசிகை ஒருவர் கூறுகையில், " படத்தில் அபிராமியின் ஆக்‌ஷன் காட்சிகள் நன்றாக உள்ளது. அதேபோல் ப்ரீத்தி முகுந்தனின் ஒவ்வொரு காட்சியும் கண்களில் ஒற்றிக் கொள்வது போல கண்களிலேயே நிற்கிறது. படத்தின் மூலம் தற்பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை குறித்தும் தெரிந்து கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

Blast receives positive public response for its intense action sequences strong performances by Arjun Abhirami and Preethi Mukundan along with emotionally engaging family and women empowerment moments
Photo Credit:

ரசிகர் ஒருவர் கூறுகையில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறித்து தகவல்களை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். பெண்கள் தங்களை காத்துக் கொள்ள தாங்களே தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை படம் கூறுகிறது. படத்தை இடைவேளைக் காட்சியைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது. நான் அடிப்படையில் அர்ஜுன் சார் ரசிகன், குடும்பமாக இணைந்து சண்டை போடுவதுமே நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு: தம்பதியர் கூறுகையில், " நாங்களும் எங்கள் குழந்தையை கராத்தே கற்றுக் கொள்ள சேர்த்துள்ளோம். பெண்களுக்கு படத்தில் வரும் கார் காட்சி போன்று நடக்கத்தானே செய்கிறது. பெற்றோர்கள் எப்போதும் குழந்தைகளுடன் இருக்க முடியாது அல்லவா. அபிராமி மேடத்துக்கு வயதானது போல் தெரியவில்லை. ஒரு காட்சியில் அவர் கொடுக்கும் உதை சிறப்போ சிறப்பு. சண்டைக் காட்சிகள் எல்லாம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்தனர்.

Blast Public Review Arjun Abhirami and Preethi Mukundan Impress Fans With Powerful Action Drama
Photo Credit:

சண்டைக் காட்சிகள்: ரசிகை ஒருவர் கூறுகையில், " பெண்கள் வலிமை பெறுவது குறித்தும் அவர்களின் எண்ணங்கள் குறித்தும் தமிழ் சினிமாவில் மிகவும் சில படங்களே வந்துள்ளது. அதில் ஒரு படம் இது. இந்த படத்தை அனைத்து பெண்களும் பார்க்க வேண்டும். படம் எனக்கு பிடித்துள்ளது. சண்டைக் காட்சிகள், நடிப்பு என மொத்தமாகவே படம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

சரியான டைட்டில்: ரசிகர் ஒருவர் கூறுகையில், " பிளாஸ்ட் என்ற டைட்டிலைத் தவிர வேறு எந்த டைட்டில் வைத்திருந்தாலும் இந்த படத்திற்கு அது செட் ஆகி இருக்காது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சார் வழக்கம்போல சிறப்பாக நடித்துள்ளார். அபிராமி மேடம் அவர்கள் தான் பெரிய சர்ப்ரைஸே, அவர் இந்த அளவுக்கு சண்டை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ப்ரீத்தி முகுந்தனும் தமிழில் ஒரு அதிரடியான என்ட்ரி கொடுத்துள்ளார்.

Blast Public Review Arjun Abhirami and Preethi Mukundan Impress Fans With Powerful Action Drama
Photo Credit:

இயக்குநரின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. பின்னணி இசை நன்றாக உள்ளது. விவேக் பிரசன்னா சண்டைக் காட்சியில் நடித்துள்ளது எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X