பிரதீப் ரங்கநாதன் வசூலை முறியடிக்குமா பிளாஸ்ட்.. குருவை மிஞ்ச காத்திருக்கும் சிஷ்யன்.. செம மேட்டர்!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 100 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் ஃப்ளாப்பாக இந்த ஆண்டு அமைந்தது. அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து இதுவரை எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ் கே. ராஜ் இயக்கிய பிளாஸ்ட் திரைப்படம் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட அனைவருக்குமே பிளாஸ்ட் திரைப்படம் பக்கா பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், விரைவில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, மாளவிகா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த எல்ஐகே திரைப்படம் 2040ல் தமிழ்நாடு எப்படி இருக்கும் காதல் எப்படி இருக்கும், ஒரு ஆப் எப்படி இதயத்தை கட்டுப்படுத்தும் என்கிற கதையை படமாக்கினாலும் படம் ரசிகர்களை கவராத நிலையில், சொதப்பி விட்டது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் அதிகபட்சமாக 66 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
பிளாஸ்ட் 60 கோடி வசூல்: இந்த ஆண்டு வெளியான படங்களில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் 300 கோடிக்கும் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயனின் பராசக்தி 100 கோடி வசூல், ராதிகாவின் தாய் கிழவி 90 கோடி வசூல், கென் கருணாஸின் யூத் திரைப்படம் 82 கோடி வசூல் ஈட்டியது. எல்ஐகே 66 கோடி வசூல் ஈட்டிய நிலையில், வெறும் 18 கோடியில் உருவான பிளாஸ்ட் திரைப்படம் 60 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குருநாதர் படத்தை பீட் பண்ணப்போறாரு: இன்னமும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வரும் பிளாஸ்ட் திரைப்படத்துக்கு போட்டியாக இந்த வாரம் கூட எந்தவொரு பெரிய படமும் வெளியாகாத நிலையில், இந்த வார இறுதிக்குள் குருநாதர் பிரதீப் ரங்கநாதனின் படத்தின் வசூலை சுபாஷ் கே. ராஜ் இயக்கிய பிளாஸ்ட் திரைப்படம் பீட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications