என்னாச்சு? பிரபல சினிமா இயக்குனருக்கு எலும்பு முறிவு.. எப்படி நடந்தது என்பது பற்றி விளக்கம்!

By

சென்னை: பிரபல இயக்குனர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.

Recommended Video

Surya Karthi on board Together | Ayyapanum Koshiyum, Prithviraj, Biju Menon

பிரபல ஹீரோ பிருதிவிராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார் பிளஸ்சி.

ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

பாலைவனம்

பாலைவனம்

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தக் கொள்ள, அந்நாட்டு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. அவர்கள் இந்தியா வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினர். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிருத்விராஜ், இயக்குனர் பிளஸ்சி உட்பட படக்குழுவினர் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜோர்டானில் நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் பிளஸ்சிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஜோர்டானில் நடந்த படப்பிடிப்பின்போது எனக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். கையில் கட்டுபோடப்பட்டது. எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
நான் இருந்த இடத்தில் இருந்து அந்தப் பகுதிக்குச் செல்ல 90 நிமிடங்கள் ஆகும் என்பதால் செல்லவில்லை.

மருத்துவமனை

மருத்துவமனை

ஏனென்றால் கேரளா திரும்புவதற்கான ஏற்பாடுகளில் அப்போது நாங்கள் இருந்தோம். அதனால் கேரளா திரும்பியதும் திருவில்லா மருத்துவமனை சென்று பரிசோதித்தேன். இப்போது குணமாகி வருகிறேன் என்றார். இயக்குனர் பிளஸ்சி காழ்ச்சா, தன்மாத்ரா, பலுங்கு உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X