twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்த மகேஷ் பாபு.. அட என்ன இப்படி சொல்லிட்டாரே!

    |

    சென்னை: விக்ரம் படம் வெளியாகி ஒரு மாத காலம் ஆக உள்ள நிலையில், அந்த படத்தை பார்த்த மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் அது பற்றி வரிசையாக பல ட்வீட்களை போட்டுள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ம் தேதி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம்.

    400 கோடி ரூபாய் வசூலை கடந்து இந்த ஆண்டின் கோலிவுட் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறி உள்ள அந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    கோல்டன் விசா.. நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்.. டிரெண்டாகும் புகைப்படம்! கோல்டன் விசா.. நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம்.. டிரெண்டாகும் புகைப்படம்!

    கலக்கிய கமல்

    கலக்கிய கமல்

    இந்த வயதிலும் அதே எனர்ஜியுடன் சமூகத்திற்கு தேவையான Drugs Free Society என்கிற லோகேஷ் கனகராஜின் கதைக்கு ஓகே சொல்லி அதில், விக்ரமாக நடித்து கலக்கி உள்ளார் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமே படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது தான் என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

    மகேஷ் பாபு பாராட்டு

    மகேஷ் பாபு பாராட்டு

    கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா நடித்த விக்ரம் படத்திற்கு கோலிவுட்டில் இருந்து சில இளம் நடிகர்களை தவிர முன்னணி நடிகர்கள் பலர் எந்தவொரு வாழ்த்தும் சொல்லாத நிலையில், டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் மகேஷ் பாபு தற்போது படத்தை பாராட்டி இருப்பது ரசிஅக்ர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    பிளாக்பஸ்டர் சினிமா

    பிளாக்பஸ்டர் சினிமா

    விக்ரம்.. பிளாக்பஸ்டர் சினிமா, நவீன யுகத்தின் கல்ட் கிளாசிக் திரைப்படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்து இந்த படத்தை எப்படி உருவாக்குனீங்கன்னு முழுசா கேட்டுத் தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு.. ஒவ்வொரு காட்சியும் மைண்ட் பெண்டிங், சென்சேஷனல் ஸ்டஃப் பிரதர் என மனதார பாராட்டி உள்ளார்.

    விஜய்சேதுபடி, பகத் ஃபாசில் நடிப்பு

    விஜய்சேதுபடி, பகத் ஃபாசில் நடிப்பு

    இதுக்கு மேல எப்படி நடிக்க முடியும்னு தெரியல, அந்த அளவுக்கு விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் படத்தில் மிரட்டி இருக்காங்க.. அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த மனுஷன் எப்படித்தான் இப்படி மியூசிக் போடுறாருன்னு தெரியல.. விக்ரம் படத்தின் இசை என்னோட டிராக் லிஸ்ட்டில் நீண்ட காலம் நிச்சயம் இருக்கும்.

    எனக்கு அந்த தகுதி இல்லை

    எனக்கு அந்த தகுதி இல்லை

    கடைசியாக கமல்ஹாசன்.. அவரது நடிப்பைப் பற்றி பேச எனக்கு நிச்சயம் தகுதி இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று சொல்வதில் ரொம்பவே பெருமையடைகிறேன். வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும் உங்களுடைய படக்குழுவுக்கும் இப்படியொரு படத்தை கொடுத்ததற்கு என பாராட்டி இருக்கிறார் மகேஷ் பாபு.

    சூர்யாவை மறந்துட்டாரு

    சூர்யாவை மறந்துட்டாரு

    ஆனால், அவரது இந்த தொடர்ச்சியான ட்வீட்களில் சூர்யாவை கடைசி வரை குறிப்பிட மறந்து விட்டார் என சூர்யா ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் குறிப்பிட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர். மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு நாங்கள் அனைவரும் ரசிகர்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

    English summary
    Mahesh Babu tweeted, "#Vikram... Blockbuster Cinema!! A New-Age cult classic!! Dir_Lokesh would love to catch up with you and discuss the entire process of Vikram! Mind-bending…Sensational stuff brother ."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X