'மன்மதன்' புதுப்பொலிவுடன் மார்ச் 19-ம் தேதி ரீ- ரிலீஸ்..குஷியில் சிம்பு ரசிகர்கள் !
சென்னை :சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று 'மன்மதன்.'
Recommended Video
2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!

இரட்டை வேடம்:
'மன்மதன்' சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அத்தனையும் தாறுமாறான வரவேற்பு பெற்ற படம், சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

ஸ்லிம் ஜோதிகா:
சிலம்பரசனுடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.இப்படம் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் குஷி:
நீண்ட நாட்களுக்கு பிறகு ஈஸ்வரன் படம் வெளிவந்து சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உட்சாகத்தை தந்த நிலையில் .சூப் ஹிட் படமான மன்மதன் குறித்த இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தாறுமாறு குஷியில் இருக்கின்றனர் .இதே போல் அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பில்லா படமும் திரையரங்குகளில் வெளி வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











